Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

சிந்தனையாளர்கள் கவணத்திற்கு


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பார்ந்த LBK சகோதர, சகோதிரிகளே !

அல்லாஹ், நம்மை முஸ்லீம்களின் வீட்டில் பிறக்கவைத்ததன் மூலம் ஈமான் உடையவர்களானோம். ஆனால் அல்லாஹ் நாடி இருந்தால் ஒரு பூசாரியுடைய வீட்டில் , ஒரு பாதிரியாருடைய வீட்டில், ஒரு நசரானியுடைய வீட்டில் பிறக்க வைத்து இருக்க முடியும். அல்லாஹ்வின் பேரருளால் நாம் அதை விட்டும் பாதுகாக்கப்பட்டோம்.

ஒரு அணு அளவு ஈமான் இருந்தாலும் நாளை அல்லாஹ் அந்த மனிதனையும் நரகில் இருந்து ஒரு நாள் வெளியேற்றி சொர்கத்தில் நுழைய செய்வான். ஒரு மனிதனிடம் முழு உலகச் செல்வம்க்கு பின் உள்ள வாழ்வு நிரந்தரமான நரகம்தான். அதே சமயம் ஒரு உண்ண உணவில்லை இருந்தாலும் அல்லாஹ்விற்கு கட்டுப் பட்டு ஈமானில்லை என்றால் அவனின் மரணத்து, உடுக்க உடையில்லை, இருக்க இடமில்லை, ஆனால் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்ட ஈமானுடைய வாழ்க்கை வாழ்கிறான் எனில் அவன் மறுமையில் நிரந்தரமாக சொர்கத்தில்நுழைய்ந்து விடுவான்.

இவ்வளவு உயர்வான பொக்கிஷமான ஈமானின் மதிப்பு நம் உள்ளத்தில் உள்ளதா ? இல்லை , ஏனெனில் இதற்காக நாம் துன்புறுத்தப்படவில்லை, கொல்லப்படவில்லை , சொத்து , சுகம் அனைத்தும் பறிக்கப்பட்டு நாட்டை

விட்டே துரத்தப்படவும் இல்லை, எதிரிகளோடு ஈமானானுக்காக போரிட்டு நம் உடல் வெட்டப்படவோ, நம் குழந்தைகள் அநாதைகளாக்கப்படவோ, விதவையாக்கப்படவோ இல்லை. அதனால் நம் உள்ளத்தில் ஈமானுடைய மதிப்பும் இல்லை.உங்கள் ஈமானை புதுப்பித்துக் கொள்ளுங்கள் என்று நபி ( ஸல் ) நவின்றார்கள். துணி பழையதாகுவதை போல ஈமானும் பழையதாகிவிடும் என்றார்கள். அல்லாஹ்வுடைய கட்டளைகளையும், நபி(ஸல்) அவர்களுடைய வாழ்க்கை முறையும் ஈமானை பொலிவாக்கும், வலிமையானதாக்கும்.

ஆனால் நம்முடைய ஈமானின் நிலை நாளுக்கு நாள் தேய்ந்துக் கொண்டே செல்கிறது. காரணம், நமது உள்ளம் ஒரு பஞ்சைப் போல , அதை பாலில் போட்டால் பாலை உருஞ்சும், தண்ணீரில் போட்டால் தண்ணீரை உருஞ்சும், சாக்கடையில் போட்டால் சாக்கடையை உருஞ்சும். அதை வெளியில் எடுத்து பிழிந்தால் அது எதை உருஞ்சியதோ அது மட்டும் வரும்.

இதேபோல நமது உள்ளம் நான்கு வாயில்கள் வழியாக விசயத்தை உருஞ்சுகின்றது. 1) கண் ( எதை பார்க்கிறதோ ) , 2) காது (எதை கேட்கிறதோ) , 3) வாய் (எதை பேசுகிறதோ) , 4) மூளை (எதை சிந்திக்கிறதோ). அதுதான்

நம் உள்ளத்தில் வளரும். எது உள்ளத்தில் வளருமோ அதுதான் செயலில் பிரதிபலிக்கும்.

இன்று நமது உள்ளத்தில் இஸ்லாத்திற்காக முக்கியத்துவம் எடுபட்டு போய்விட்டது. நாம் நம் குழந்தைகளை ஆலிம் , ஹாபிஜ், முப்தியாக ஆக்குவதுமில்லை, மார்க அறிஞகர்களின் முக்கியத்துவம், அவர்களை கண்ணியப்படுத்தி அவர்களிடம் இருந்து மார்கத்தை தெரிந்துக் கொள்வதும் இல்லை. நாம் இமாம்களை 5 வேளை தொழவைக்கும் ஒரு வேலை ஆளைப் போலத்தான் நினைக்கிறோம். அவகள் பலஹீனத்தை பயன்படுத்தி எவ்வளவு குறைவான சம்பளம் வழங்க முடியுமோ அவ்வளவு குறைவாக தருகிறோம். நம் இஷ்டப்படி அவர்கள் நடக்க வேண்டும் இல்லையெனில் வேலையைவிட்டு தூக்கிவிடுவோம்.

இவ்வளவு பெரிய முஸ்லீம்கள் நிறைந்து வாழும் ஊரில் நமது சந்தேகங்களை தெளிவுபடுத்தும் ஆற்றல் உடைய மார்க்க அறிஞர்களை வரவழைத்து வேலைக்கு அமர்த்தவோ , அதற்கேற்ற சம்பளம் வழங்கவோ தயாரில்லை. நமது குழந்தைகளை உலகக் கல்வியோடு மார்க்க அறிஞர்களாக்கும் எத்தனையோ வாய்ப்புகள் உள்ளபோதும் ,நாம் அதற்கும் தயாரில்லை. இதன்

மூலம் மார்க்க விஷயம் வந்த அனைத்து வழிகளையும் நாம் அடைத்துவிட்டோம்.

பெண்களுக்கு மார்க்க விஷயங்களை எடுத்துச்சொல்லவோ , அவர்களுடைய மார்க்க சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்தவோ எந்த முயற்சியும் செய்யப்படாமல் அலச்சியப்படுத்தப்படுவதும் , அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் நிகழ்சிகளை கைகாட்டிவிட்டு சமாதானம் ஆகிகொள்வதும்தான் நடந்து கொண்டு உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் சம்பாரிக்க வேண்டும். ஆண்கள் மட்டுமல்ல, முடிந்தால் பெண்களும் சம்பாரிக்க முயற்சி செய்கிறோம். ஆனால் மார்க்க விளக்கம் மட்டும் ஊரில் சில இடங்களில் நடந்தால் 200,300 பெண்களுக்கு மட்டும் போதும் என்பது, நம்மை நாமே ஏமாற்றி கொள்வதுதான்.

பெண்கள் ஆர்வமுள்ளவர்கள் கூட கலந்து கொள்ள முடியாமல், மார்க்க விளக்கம் நடக்கும் சில இடங்களும் தொலைவில் உள்ளதால் பெண்கள்

தங்கள் குழந்தைகள், சமையல், வீட்டு வேலைகள் காரணமாக வர இயலாத

நிலையும் உள்ளது.

இதனால் நமது மத்தியில் மார்க்க விளக்கம் , ஈமான் இறையச்சம் , மிகவும்

பலஹீனமான நிலையில் உள்ளது. இஸ்லாம் நம் வாழ்க்கையில் வரும் அனைத்து வழிகளையும் அடைத்துவிட்ட நாம், நமது பாதையை , ஈமானை , செயலை அல்லாஹ்வுக்கு எதிராக திருப்பும் அனைத்து வழிகளையும் திறந்து விட்டு உள்ளோம். இதனால்நம் வளரும் தலை முறை இந்த பலஹீனமான ஈமானுடனேயே தன் வாழ்க்கையை துவங்குகிறது. இது மிகவும் ஆபத்தான நிலை, கயிற்றில் நடப்பவன் ,எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்பது போன்ற நிலை, இதனால்தான்நம் இளம் தலைமுறை வழிதவறி விழுந்து விடுகின்றனர் என்பதை நம் கண்ணாலே கண்டுகொண்டு உள்ளோம். 

விதை நெல்லை விருந்தாக்கிவிட்டோம், பெண்கள் பள்ளி நமதூரில் +2 வரை
இருக்கும் போது , வெளியூருக்கு பஸ் ஏற்றி அனுப்புகின்றோமே , சிந்திக்கவேண்டாமா?bபெண்களுக்கு என்று தனியாக கல்லூரிகள் இருந்தும் , ஆண்களோடு சேர்ந்து படிக்கும் கல்லூரியில் சேர்க்கின்றோமே…! பஞ்சையும் , நெருப்பையும் பக்கத்தில் வைத்துவிட்டு, தீப்பற்றி எறியும் போது அழுது என்ன லாபம்? பிள்ளைகளை கண்காணிக்காமல் சீரியலில் கட்டுண்டு கிடக்க , மணிக்கனக்கில் பேசும் உங்கள் செல்வங்கள் , நஞ்சை உருஞ்சும் பஞ்சுகளாகி
விடுகின்றனர். ஒவ்வொரு பொறுப்புதாரியும் , தன் பொறுப்பைப்பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவான். குடுப்ப பொறுப்பு அதன் தலைவனையே
சேரும். பாலைவனத்தில் பாடுபட்டு பணத்தை அனுப்பியதாலே பொறுப்பு நீங்கிவிடாது , நீங்கள் குடும்பத்திற்கு இஸ்லாத்தை நடைமுறைப் படுத்தவில்லை எனில் நாளை கியாமத்து நாளில் ஒவ்வொரு பெண்ணும் நான்கு பேர்மீது வழக்கு தொடுப்பாள் .1) கணவன் , 2) தகப்பன்
, 3) சகோதரன்  4) மகன் .
யா அல்லாஹ் இந்த நால்வரும் , எல்லா வசதியும் எனக்கு செய்து தந்தார்கள், ஆனால் இஸ்லாத்தை எனக்கு எடுத்து சொல்லவில்லை , சொல்லியிருந்தால் நானும் வழிபட்டு இருப்பேன், நான் வழி தவறியதற்கு இவர்களும்தான் காரணம், “என்னோடு இவர்களையும் நரகத்துக்கு அனுப்புஎன்று வாதிடுவாள்.

எல்லா பிரச்சனைகளுக்கும் , தீமைகளிடம் இருந்தும் தீர்வும் , பாதுகாப்பும், எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கிய இஸ்லாம் நம் வாழ்வில் முழுமையாக வருவதுதான்.

அதற்கு தலைசிறந்த உலமாக்களை அழைத்து நமதூரிலேயே  தங்கவும் வைத்து, நமது ஊரின் அனைத்துப் பகுதியையும் சென்றடையும் வகையில் (அல்ஷா, நாட்டாண்மை நகரையும் சேர்த்து) அங்கேயே மார்க்க விழிப்புணர்வு பிரச்சாரம் தொடர்ந்து வார வாரம் இடைவிடாது பெண்களுக்காக நடத்தப்பட வேண்டும். அவர்கள் மார்க்க சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறும் வகையில்

வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்தால் , உங்களை வெல்ல யாராலும் முடியாது ?

நன்றி :  பாஷா ஹாஜா முஹைதீன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக