மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் – நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.
திருக்குர்ஆன் 2:168
“இறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று. (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்” நபி(ஸல்)
அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி)
நூல்: புகாரி
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.
திருக்குர்ஆன் 2:183
“எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை” – நபி(ஸல்)
அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி)
நூல்கள்: புகாரி, முஸ்லிம்
“நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!” – நபி(ஸல்)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி, முஸ்லிம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக