Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 4 ஆகஸ்ட், 2012

ஆகஸ்ட் 5 முதல் தமிழக முஸ்லிம்கள் பற்றிய தொடர்...


ஆகஸ்ட் 5 முதல் – தமிழக முஸ்லிம்கள் பற்றிய தொடர்
பிபிசி வானொலியின் தமிழ்ச் சேவையான தமிழோசை வானொலியில் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் குறித்த ஒரு தொடர் நிகழ்ச்சி ஒலிபரப்பாகவுள்ளது.ஆகஸ்ட்5ம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது.
வாராந்திர நிகழ்ச்சியான இது 9 வார காலத்திற்கு இது ஒலிபரப்பாகும். பிபிசி தமிழோசை தவிர பிபிசியின் இணையதளத்திலும் (bbctamil.com) இதைக் காணலாம்.
2001 மக்கள் தொகைக் கணக்குப்படி தமிழகத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 6 சதவீதமாகும். நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் முஸ்லிம்கள் நல்ல நிலையில் உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பில் சிறந்து விளங்குகின்றனர்.

இருப்பினும் மற்றவற்றில் முஸ்லிம் சமுதாயத்தினர் பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர். குறிப்பாக வீட்டு வசதியில் முஸ்லிம் சமுதாயத்தினரை பிற சமுதாயத்தினர் புறக்கணிக்கும் நிலையே காணப்படுவதாக தமிழக முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் முஸ்லிம்களின் வாழ்க்கை முறை குறித்து விவரிக்கப்படும் என்று பிபிசி தமிழோசை ஆசிரியர் திருமலை மணிவண்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்தினர் எந்த அளவுக்கு சமூக பொருளாதார ரீதியாக சிறந்த விளங்குகின்றனர் என்பது குறித்து இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக தெரிவிக்கப்படும். இந்தியாவில் முஸ்லிம்களின் அவல நிலை குறித்து சாச்சார் கமிட்டி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ள நிலையில் தமிழகத்தில் அவர்கள் எப்படி சிறந்து விளங்குகின்றனர் என்பதை இந்த நிகழ்ச்சி வெளிச்சம் போட்டுக் காட்டும்.
மேலும் தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்தினர் எந்த அளவுக்கு தங்கள் முன்புள்ள சவால்களை சந்தித்து தலை சிறந்து விளங்குகின்றனர் என்பதையும் இந்த நிகழ்ச்சி விவரிக்கும் என்றார்.
இந்த நிகழ்ச்சியை பிபிசி தமிழோசை செய்தியாளர் டி.என்.கோபாலன் தயாரித்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்காக தமிழகத்தின் பல பகுதிகளிக்கும் கோபாலன் பயணம் செய்துள்ளார். இதுகுறித்து கோபாலன் கூறுகையில், நான் சென்று சந்தித்த முஸ்லிம்கள் எல்லாம் என்னிடம் கூறியது, இந்துக்களும், நாங்களும் மிகுந்த சகோதரத்துவத்துடன், ஒற்றுமையாக இருப்பதாகவும், ஆனால் அரசுமட்டத்தில், அதிகாரிகள் அளவில் தங்களை இரண்டாம் தர குடிமக்களாகப் பார்ப்பதாகவும் வருத்தத்துடன் கூறினர் என்றார்.
ஆகஸ்ட் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த 9 வார நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. இதே நிகழ்ச்சியை பிபிசிதமிழ் இணையதளத்திலும் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக