Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 4 ஆகஸ்ட், 2012

இதனை விடவும் சிறந்த பாவமீட்சி உண்டா?


இதனை விடவும் சிறந்த பாவமீட்சி உண்டா?








இதோ! விபச்சாரத்தில் ஈடுபட்டுக் கர்ப்பம் தரித்த மதீனத்து மாது ஒருத்தி, செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறாள். அதற்கான தண்டனையைத் தாருங்கள் என்று கேட்கிறாள். என்ன தண்டனை? அதனை நன்றாகத் தெரிந்து கொண்டுதான் கேட்கிறாள். திருமணமானவர்கள் விபச்சாரம் செய்துவிட்டால் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டுமென்பதுதான் அது! அந்தத் தண்டனையைத்தான் தேடி வருகிறாள். தண்டனை பெற்றால்தான் இறைவ
ன் அக்கொடிய பாவத்தை மன்னிப்பான் எனும் உறுதியுடன் வருகிறாள். இஸ்லாத்தின் வரலாற்றைத் தவிர வேறெங்கும் இதற்கு நிகரான நிகழ்ச்சியை நாம் காண்பது அரிது!


இம்றான் ஹுஸைன்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”ஜுஹைனா என்ற குலத்தைச் சேர்ந்த ஒருபெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்தாள். அவள் விபச்சாரத்தில் ஈடுபட்டதினால் கருவுற்றிருந்தாள். அவள் சொன்னாள்: அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனை பெறும் அளவுக்குத் தவறு செய்து விட்டேன். என் மீது தண்டனை நிறைவேற்றுங்கள்.

நபி(ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணின் பொறுப்பாளரை அழைத்தார்கள். அவரிடம் சொன்னார்கள்: நீர் இவளிடம் மிகவும் நல்ல முறையில் நடந்து கொள்ளும். குழந்தை பெற்றெடுத்ததும் இவளை என்னிடம் அழைத்து வாரும்.

அவ்வாறே அவளுக்குக் குழந்தை பிறந்ததும் அவளை நபியவர்களிடம் அழைத்து வந்தார் அவர். அவளது விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்தார்கள். அவள் மீது அவளுடைய ஆடைகள் கட்டப்பட்டன. பிறகு கல்லெறிந்து அவளைக் கொல்லுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பிறகு நபியவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.

அப்பொழுது உமர்(ரலி)அவர்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! இவள் விபச்சாரம் செய்தவளாயிற்றே! இவளுக்காகவா நீங்கள் ஜனாஸா தொழுகை நடத்துகிறீர்கள்?

அதற்கு நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: இந்தப் பெண்மணி தேடிக் கொண்டது எத்தகைய பாவமீட்சியெனில், அதனை மதீனத்து முஸ்லிம்களில் எழுபது பேருக்குப் பங்கீடு செய்தால் அவர்கள் அனைவருக்கும் அது போதுமாகி விடுமே! அல்லாஹ்வின் வழியில் தனது உயிரையே இவள் ஈந்து விட்டாளே! இதனைவிடவும் சிறந்த நிலையொன்றை நீர் கண்டுள்ளீரா என்ன? ” நூல்: முஸ்லிம்
 





தகவல் சவுதியில் இருந்து நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக