Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

தொலைந்து போன லெப்பைக்குடிக்காடு பொழுதுபோக்கு அடையாளங்கள் !!!


கபடி ...கபடி என்று
கைகொருத்தாடிய
தெருக்களெல்லாம்
கபளிகரமாக கையாடப்பட்ட
வேதனையை என்சொல்வேன்...

பள்ளியிலும் மதரஸாவிலும்
பாசத்தோடு
பாடங்களைபடித்து விட்டு
பாங்கான நண்பர்களை
பகுதியாய் பிரித்துக்கொண்டு
அடுப்புச்சாம்பலால்
ஐந்து கோடுகளாய்
அடையாளமிடப்பட்டு
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அரை நிர்வாணமாய்
கோமளத்தை
...தெரிய மடித்துக்கொண்டு
குஸ்த்திபடி குதித்தாடிய
தெருக்களெல்லாம்
படிகளாலும் படுகுழிகளாலும்
பயணிக்க முடியாமல்
பழுதடைந்து போகும்
வேதனையை என்சொல்வேன்...

மக்கள் நீதிமன்றத்தில் கதறி அழுத அப்துல் நாஸர் மஃதனியின் மகன்!


மஃதனியின் மகன் உமர் முக்தார்
புதுடெல்லி: “எனது வாப்பாவை(தந்தை) காணும் பொழுதெல்லாம் நான் உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொள்வேன். ஆனால், கடைசியாக நான் அவரை சந்தித்தபொழுது என்னால் அடக்க முடியவில்லை.” என்று அப்துல் நாஸர் மஃதனியின் மகன் உமர் முக்தார் மக்கள் நீதிமன்றத்தில் கதறி அழுத காட்சி அனைவரையும் நெகிழ்ச்சி அடையவைத்தது. ஜோடிக்கப்பட்ட வழக்குகளுக்கு எதிரான விசாரணையை நடத்திய மக்கள் நீதிமன்றத்தில் கலந்துகொண்டு தனது தந்தைக்கு ஏற்பட்ட துயரங்களை எடுத்துரைத்தார் உமர் முக்தார்.

மத அவமதிப்பை குற்றகரமாக்கும் சர்வதேச சட்டம் தேவை – ஒ.ஐ.சி


OIC Calls for international 'blasphemy' law must be resisted
ஐ.நா:இஸ்லாத்திற்கு எதிரான தாக்குதல்களை குற்றகரமாக கருதும் சர்வதேச சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஒ.ஐ.சி கூறியுள்ளது. ஐ.நா பொது அவையின் கூட்டத்தை முன்னிட்டு நியூயார்க்கில் நடந்த ஒ.ஐ.சியின் வெளிநாட்டு அமைச்சர்களின் கூட்டத்தில் சர்வதேச நாடுகளுக்கு இக்கோரிக்கை விடுக்கப்பட்டது.

துபாயில் ‘ஜிடெக்ஸ் ஷாப்பர்’ துவக்கம்!


Dubai World Trade Centre. GITEX Shopper
துபாய்:மேற்காசியாவில் மிகப்பெரிய தகவல் தொழில் நுட்ப, மின்னணு பொருட்களின் கண்காட்சியான  (Gitex Shopper) ‘ஜிடெக்ஸ் ஷாப்பரை’ நேற்று (29-09-2012) துபாய் கல்ச்சர் அண்ட் ஆர்ட்ஸ் அதாரிட்டி தலைவரான ஷேக் மாஜித் பின் முஹம்மது ராஷித் துவக்கி வைத்தார். வேல்ட் ட்ரேட் செண்டரில் நடைபெறும் இந்த வர்த்தக திருவிழாவில் நேற்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.
நுகர்வோரை கவருவதற்காக பல்வேறு எலக்ட்ரானிக் நிறுவனங்கள் மிகப்பெரிய சலுகைகளுடன் 8 தினங்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பங்கேற்றுள்ளன.

சனி, 29 செப்டம்பர், 2012

இதயமே…. எனது இதயமே… இன்று உலக இதய நாள்!


World Heart Day
உணவும், ஓய்வும் இன்றி வேலையே கதி என்று ஓடி உழைக்கும் இளைஞர்கள் கவனிக்க. ஒரு தினம் யாரும் எதிர்பாராத வகையில் நீங்களும் ‘sudden attack’ ஆல் பாதிக்கப்படலாம்.
இந்தியாவில் இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 20 வயது ஆக குறைந்துள்ளது என்று புதிய ஆய்வு அறிக்கை கூறுகிறது. இளைஞர்களுக்கும் ஏன் குழந்தைகளுக்கு கூட இதயநோய் பாதிக்க துவங்கியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இதுக்குறித்து நாம் சிந்தித்திருக்க மாட்டோம். டெல்லி,மும்பை, பெங்களூர் உள்ளிட்ட மாநகரங்களில் தாங்கள் நடத்திய சர்வேயில் இதய நோய் வருவதற்காக வாய்ப்பு 20 வயதாக குறைந்துள்ளது என்று டெல்லி பி.எல்.கே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநரும் சீனியர் கன்ஸல்டண்டுமான டாக்டர் நீரஜா பாலா கூறுகிறார்.

தாவா பிரச்சாரம் ( இஸ்லாத்தின் பால் மக்களை அழைக்கும் பணி )


தாவா பிரச்சாரம் ( இஸ்லாத்தின் பால் மக்களை அழைக்கும் பணி )

அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பிரச்சாரம் செய்து வருகிறோம் .
அதை நீங்களும் அறிந்ததே . அல்ஹம்துலில்லாஹ்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்சனுக்கு புகழாரம் சூட்டும் ஜமாஅத்தே இஸ்லாமியின் அதிகாரப்பூர்வ ஏடு!


Jamaat-e-Islami praises ex-RSS chief K Sudarshan, mourns his death
புதுடெல்லி:சங்க்பரிவார பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் மறைந்த முன்னாள் சர்சங்க்சாலக் (தேசிய தலைவர்) கு.சி.சுதர்சனுக்கு ஜமாஅத்தே இஸ்லாமியின் அதிகாரப்பூர்வ ஏடான தஃவத் புகழாரம் சூட்டியுள்ளது. சுதர்சனின் மரணத்தில் மிகுந்த துக்கம் அடைவதாக அப்பத்திரிகையின் தலையங்கத்தில் ‘கபர் ஓ நதர்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.

வியாழன், 27 செப்டம்பர், 2012

அப்பாவி சிறுபான்மை மக்கள் மீது தீவிரவாத முத்திரையை குத்தாதீர்கள்! – அஹ்மதாபாத் வழக்கில் 11 முஸ்லிம்களை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு!


Police must ensure that no innocent person has the feeling of sufferance only because “my name is Khan, but I am not a terrorist,” a Bench of Justices H.L. Dattu and C.K. Prasad said on Wednesday.
புதுடெல்லி:ஒரு நபரின் மதத்தை பார்த்து அவருக்கு கொடுமை இழைக்க சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யாதீர் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி குஜராத் மாநில தடா நீதிமன்றம் தண்டித்த 11 அப்பாவி முஸ்லிம்களை 10 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலைச்செய்த வழக்கில் நீதிபதிகளான ஹெச்.எல்.தத்து, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பில் கூறியது.
1994-ஆம் ஆண்டு ஜூன் மாதம் குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் ஹிந்துக்கள் நடத்திய ஜகன்னாத பூரி யாத்திரையின் போது கலவரத்தை நடத்த சதித்திட்ட தீட்டினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 முஸ்லிம்கள் சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

புதன், 26 செப்டம்பர், 2012

அல்லாஹ்வின் ரஹ்மத் இரங்கி கொண்டு உள்ளது நமதூரில் ....



அல்லாஹ் அக்பர் ... அல்லாஹ் அக்பர் ....

தற்போது 26.09.2012 நமதூரில் இடியுடன் கூடிய பழத்த மழை இரவு 9 மணியில் இருந்து
பேய்துக் கொண்டு இருக்கிறது. இவை 10 மணிவரை பழத்த மழையாக இருந்தது. 10 மணிக்கு
அப்பாள் தூரலாக இருந்து வருகின்றது.


திருக்குர்ஆன், இஸ்லாமிய நூல்கள், பத்திரிகைகள் உங்கள் வசம் உள்ளதா? சிறைக்குச் செல்ல தயாராக இருங்கள்!


If you have Qur'an, Islamic books and magazines - Be prepared to go to jail!
புதுடெல்லி: முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க அரபு மற்றும் உருது மொழியில் எழுதப்பட்ட நர்ஸரி புத்தகங்களையும், கவிதைகளையும் ஆதாரமாக காட்டும் இழிவான நிலைக்கு இந்திய போலீஸ் தள்ளப்பட்டுள்ளது.
தடைச் செய்யப்படாத புத்தகங்களையும், திருக்குர்ஆன் வசனங்களையும், இஸ்லாத்தைக் குறித்த பாடப் புத்தகங்களையும் கைப்பற்றி இவை ‘நாங்கள் தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றிய ஆதாரங்கள்’ என்று போலீஸ் கூறியுள்ளது.

என் கேள்விக்கு இறைவனின் பதில்!

அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்!

துபாய் காயல் நல மன்றத் தலைவர் ஜனாப் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்கள் கருத்தாழமிக்க நல்ல பல மின்னஞ்சல்களை அவ்வப்பொழுது அனுப்பி வைப்பார்கள். அதில் சமீபத்தில் வந்த ஒரு மின்னஞ்சல் என்னை மிகவும் ஈர்த்தது.

டாக்டர் அஹ்மத் ஒரு பிரபலமான மருத்துவர். அவர் ஒரு தடவை ஒரு முக்கியமான மருத்துவ மாநாட்டுக்குப் புறப்பட்டார். அது இன்னொரு நகரத்தில் நடக்கவிருந்தது. அந்த மாநாட்டில் டாக்டர் அஹ்மதுக்கு ஒரு விருது வழங்கப்படவிருந்தது. அவர் அண்மையில் நடத்திய ஒரு நீண்ட நெடிய மருத்துவ ஆராய்ச்சிக்காக, அதனைப் பாராட்டும் விதமாக அந்த விருதை வழங்கி அவரை கௌரவிக்க இருந்தார்கள்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

தீன் இயக்கம் காரிய கமிட்டி கூட்ட அழைப்பிதழ்


தீன் இயக்கத்தின் காரிய கமிட்டி உறுப்பினர்கள் முதல் கூட்டம் இன்ஷா அல்லாஹ் வரும் 28.09.2012 வெள்ளி கிழமை மஃரிப் தொழுகை முடிந்து டெல்டா ரூமில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு


பாபுலர் பிரண்டுக்கும் அதிமுக விற்கும் தொடர்பா ?


பாபுலர் பிரண்டுக்கும் அதிமுக விற்கும் தொடர்பா ?
நமதூர் பாபுலர் பிரான்ட் அலுவலகத்தில் முன்பக்கத்தில் அதிமுக கட்சி வண்ணத்தில் தனது அலுவலக பெயரை பதித்துள்ளனர். உங்களுக்கு வேற கிடைக்கவில்லையா?
நமது நிருபர். 

தண்ணீர் குட்டை...


தண்ணீர் குட்டை
நேற்று இரவு லேசான மழை பொழிந்தது இதனால் நேற்று இரவு சற்று வெப்பம் தணிந்து இருந்தது. இருந்தபொழுதும் இன்று வெப்பம் வழக்கம்போல் காட்டியது.
நேற்று இரவு பொழிந்த லேசான மழையினால் தண்ணீர் குட்டை தேங்கி இருப்பதை படத்தில் காணலாம். இடம் தஞ்சாவூர் ஹோட்டல் அருகில்.
ஏற்கனவே நமதூர்ல கொசு தொல்ல தாங்க முடில இதுவேறையா? என்று

நமதூரில் 360 குடும்பங்களின் நிலை என்ன?

நமதூரில் 360 குடும்பங்களின் நிலை என்ன?
நாம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக குறைதீர்க்கும் முகாம் நமதூரில் நடைபெற்றதையும், அதன் விளக்கத்தையும் நமது இனைய தளத்தின் வாயிலாக பார்த்தோம். அதில் நமதூரில் வீடு இடித்தலை பற்றியும் தி மு க மற்றும் அதிமுக நிலைபாடுகளையும் நம்மால் உணர முடிந்தது.
இதை பற்றி பேசி இரண்டு நாட்களில், இந்த விஷயம் அதிவேகமாக அரசு கையாள தயாராக உள்ளதாக நமக்கு செய்திகள் தெரியவந்துள்ளது. 
நமதூர் வாசிகளின் நிலைப்பாடு:

“ லைட் ” போடாமல் சமாளிக்கலாம் மின் வாரியம் யோசனை !


தமிழகத்தில் குறைந்தது 12 மணி நேரம் முதல் அதிகபட்சம் 16 மணி நேரம் வரை மின்சாரம் இல்லை என்று மக்கள் குமுறுகிறார்கள்.

இதனால் அன்றாடப் பணிகளான மிக்ஸி , கிரைண்டர்களை இயக்க முடியவில்லை . பிரிட்ஜ் ரிப்பேராகி விடுகிறது. மின்விசிறிகளை இயக்க முடியவில்லை . இதனால் தினசரி வாழ்க்கை கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போயுள்ளது . என்ன செய்வது , எங்கு போய் முட்டிக் கொள்வது என்று
தெரியாமல் தமிழக மக்கள் குறிப்பாக இல்லத்தரசிகள் பெரும் குமுறலில் உள்ளனர் . மாணவர்கள் படிக்க முடியவில்லை . தொழில் நிறுவனங்கள் வேலை செய்ய முடியில்லை .

திங்கள், 24 செப்டம்பர், 2012

சிறந்த குடிமகன் தேசிய விருதிற்காக (Best Citizens of India) அமீரக வாழ் தமிழர் ஹூசைன் பாஷா அவர்கள் தேர்வு


அமீரக வாழ் தமிழருக்கு தேசிய விருது.
சிறந்த குடிமகன் தேசிய விருதிற்காக (Best Citizens of India) அமீரக வாழ் தமிழர் ஹூசைன் பாஷா அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2003-ம் ஆண்டு முதல் துபாயில் பணியாற்றி வருகிறார். வணிகம், நிர்வாக மேலாண்மை, மனிதவள மேம்பாட்டுத்துறை ஆகியவற்றில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர், பன்னாட்டு வணிக மேலாண்மையில் எம்.பில். படிப்பையும் முடித்துள்ளார். மேலும், வழக்கறிஞர்களின

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

திருச்சியில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் சார்பாக நடந்த கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம்


செப் 22 : திருச்சி மேலசிந்தாமணி  அருகில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் சார்பாக  நபி (ஸல் ) அவர்களை இழிவுபடுத்தும் படத்தை வெளியிட்டதற்கு அமெரிக்காவிற்கு கண்டனம் தெரிவித்து சரியாக சுமார் 3 மணிக்கு கண்டன கோசத்துடன் துவங்கியது .மாவட்ட ஜமாத்துல் உலமா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து  இயக்கங்களின் தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர் .இதில் 

நம்பினால் நம்புங்கள்! நமதூரில் குறைதீர்க்கும் முகாம்.

 நமதூரில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.



நேற்று நமதூரில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் எதிர்கட்சி MLA S.S.சிவசங்கர் தலைமை வகுத்தார். இதில் நமதூரிளிருந்து இரு பெரும் ஜமாதார்களும், நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்.  

சனி, 22 செப்டம்பர், 2012

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல் அறிவிப்பு!


சென்னை: தமிழக வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் 7, 14, 21 ஆகிய தேதிகளில் இதற்கான வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் பேசியபோது வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் அக்டோபர் 1 முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 2013 ஜனவரி மாதம் 1-ம் தேதியோடு 18 வயது பூர்த்தி அடைய இருப்பவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இப்போதே விண்ணப்பிக்கலாம் என்றார்.

இந்தியாவில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை 26 லட்சமாக உயரும் ஆய்வுத்தகவல்


சென்னை, செப்.22- இதயநோய் பாதிப்புக் கான காரணங்கள் குறித்து அகில இந்திய அளவில் சப்போலா லைப் ஆய்வு 2012 என்ற பெயரில் பொதுமக்களி டம் சர்வே நடத்தப் பட்டது. இந்த சப்போலா லைப் ஆய்வு முடிகள் குறித்து அப்போல்லோ மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைக்கான நிபுணர் மருத்துவர் முத்து வேல் சோமசுந்தரம் கூறியதாவது:-
இந்த ஆய்வை கண்டு மருத்துவ நிபுணர்கள் கவலைஅடைந்துள்ளனர். 1990ஆம் ஆண்டில் 12 லட்சமாக இருந்த இதய நோயாகளின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 26 லட்சமாக உயரும். இதில் அதிகமானோர் 30-44 வயதிற்குட்பட்ட வேலைக்கு செல்வோர் ஆவர்.

திடீர் குப்பம் வாவுசும், பிஸ்மில்லா நகர் நன்னி அத்தாவும்.


திடீர் குப்பம் வாவுசும், பிஸ்மில்லா நகர் நன்னி அத்தாவும்.
அத்தா : யாரது வாவுசு போல தெரிது, அஸ்ஸலாமு அழைக்கும், வா வாவுசு நல்லா இருக்கியா?
வாவுசு : வா அழைக்கும் சலாம், நல்லா இருக்கேன்  மச்சான். நீங்க எப்படி இருக்கீங்க?
அத்தா : அல்லாஹ்ம்துலில்லாஹ், நல்லா இருக்கேன். நீ எங்க இவ்வளவு தூரம் ?
வாவுசு : பாப்பாவீடு வரைக்கும் வந்தேன். அப்படியே உங்களையும் பாத்துட்டு போலாம்னுதான் ? ஏமச்சா அங்க அங்க ஆர்பாட்டம்னு நடக்குதே நீங்க போலையா? 

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

நமதூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.


நமதூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வளம் வந்தது.
நமதூரில்  நேற்றைய முன்தினம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வளம் வந்தது. இதனால்  நேற்றைய முன்தினம் மாலை முதல் நமதூர் ஒரு பதற்றமான சூழ்நிலையில் இருந்தது. இதற்காக சுமார் 350 க்கு மேற்ப்பட்ட காவல்துறையினர் வந்திறங்கினர்.
மேற்கு மாட்டுபாலம் முதல் கிழக்கு பெண்கள் மேல்நிலை பள்ளிவரை, பள்ளிவாசல்கள், சாலையோர தெருக்கள் முக்கு, மருத்துவமனைகள் மற்றும் பேருந்துநிலையம் போன்ற இடங்களில் ஒவ்வொரு இடங்களிலும் 4  பெண் போலீஸ் உட்பட சுமார் 8 க்கும் மேற்பட்ட காவல் துறை கண்காணிப்போடு இருந்தது. 

வியாழன், 20 செப்டம்பர், 2012

உலக வாழ்க்கைக்கு முக்கியதுவம் கொடுக்கும் நமதூர் முஸ்லீம் வாசிகள்...


உலக வாழ்க்கைக்கு முக்கியதுவம் கொடுக்கும் நமதூர் முஸ்லீம் வாசிகள்...

கடந்த 18.09.2012 அன்று இரவு நமதூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆர்கெச்டா நடந்தது. இதில் திரளாக மக்கள் கலந்து கொண்டனர். நாம் இவர்கள் செய்யும் வழிமுறையை எப்போதும் குறைசெல்லுவதும் இல்லை . அப்படி குறை செல்ல எங்களுக்கு இஸ்லாம் கற்றுதரவும் இல்லை.

அல்லாஹ் தன்திருமறையில் கூறுகின்றான்:

எல்லை பகுதியை விரிவு படுத்துவார்களா?

எல்லை பகுதியை விரிவு படுத்துவார்களா? 
அவதிக்கு உள்ளாகும் நமதூர் பொதுமக்கள்.
நமது நிருபர்.

இரட்டை வேடம்.


நமதூரில் முழு கடை அடைப்பு.

நமதூரில் முழு கடை அடைப்பு.
 19-09-2012 இன்று நமதூரிலும் எதிர்கட்சி மற்றும் வணிகர் சங்கம் நடத்தும் முழு கடைஅடைப்பு நிகழ்ந்துள்ளது. 

பால்விலை, மின்கட்டணம் விலை மற்றும் பேருந்து விலைகட்டணம் போன்றவைகளை கருத்தில் கொண்டு எதிர்கட்சிகள் வணிகர் சங்கம் மற்றும் இதர சில அமைப்புகளும் இணைந்து முழு கடை அடைப்பு போராட்டம் அறிவித்ததின் விளைவாக இன்று நமதூரில் முழு கடைஅடைப்பு நிகழ்ந்துள்ளது. 

கடந்தவார நிகழ்வுகள்.


கடந்தவார நிகழ்வுகள்.
  • கடந்தவாரத்தில் வெள்ளிகிழமை ஒருநாள் மட்டுமே பலத்த மழை பொழிந்தது.
  • நேற்று மாலை லேசான மழை பொழிந்தது.
  • நமதூரில் மற்றும் சுற்றயுள்ள ஊர்களில் வெயில் மட்டுமில்லாமல் வெப்பத்தின் தாக்கமும் அதிகமாக உள்ளது.
  • நமதூரில் குச்சி ஐஸ் நடப்பு விலை ரூ : 3 . 00.
  • பிறை மேடை பத்திரிகை நமதூரில் சில இடங்களில் குறிஞ்சி பூ போல் ஒட்டப்பட்டுள்ளது.
  • நமதூரில் சுமார் வாரத்திற்கு 10 திருமணம் வீதம் நடைபெறுகிறது.
  • கடந்த இருநாட்களாக காலை 6 மணிக்கு

தி.மு.க கொடி அரை கம்பத்தில் பறந்தது.


தி.மு.க கொடி அரை கம்பத்தில் பறந்தது. 
நமதூரில் 5 நாட்களுக்கு முன் தி.மு.க வினுடைய முக்கிய பிரமுகர் குடும்பத்தில் மையத்து ஏற்ப்பட்டதால், அந்தக்கட்சி கொடி கடந்த 4 நாட்களாக அரை கம்பத்தில் பறந்தது. 

நமது நிருபர். 

தாருஸ்ஸலாம்- மிடமிருந்து மழைதொழுகைக்கு விளக்கம்..

பிஸ்மில்லாஹ்..
http://labbaikudikadunews.blogspot.inநீங்கள் வெளிபடுத்தும் ஐயப்பட்டுக்கு, தாருஸ்ஸலாம் விளக்கமளிக்க வேண்டியிருந்தீர்கள்.
1-மழை (வேண்டி) தொழுகையின் போது நபி (ஸல்) அவர்கள் தனது மேலாடையை புறட்டிப்போட்டுக்கொண்டு 2 ரகாஅத் பெருநாள் தொழுகையைப்போல் தொழுதார்கள். அதை கருத்தில் கொண்டு நபிவழி பேனும் நமது சகோதரர்கள் மழை (வேண்டி) தொழுகையை தொழ செய்தார்கள். 2-அப்படிபட்ட தொழுகையை திடலில் நடத்தினார்கள். 3-ஆண்களுடன், பெண்களும் கலந்து கொண்டார்கள்.

புதன், 19 செப்டம்பர், 2012

சென்னையில் காவல்துறை கண்மூடிதனமாக தடியடி பாதிக்கப்பட்ட சகோதரன் அப்துல் ரஹ்மானுக்கு துவாஆ செய்யுங்கள்


18.09.2012 சென்னையில் அனைத்து முஸ்லீம் அமைப்புகளும் ஒன்று திரண்டு இனைந்து நபி நாயகம்(ஸல்)அவர்களை பற்றி தவறாக திரைபடம் எடுத்தமைக்காக அமெரிக்கவுக்கு எதிராக மாபெரும் ஆர்பாட்டம் சென்னையில் நடத்தினர்.காவல்துறை கண்மூடிதனமாக தடியடி நடத்தியது அதனால் பாதிக்கப்பட்ட இளைஞர் அப்துல் ரஹ்மான் அவர்களின் புகைப்படம் இவர் குணம் அடைய அனைவரும் துவாஆ செய்யுங்கள் .சகோதரர்களே இந்த சஹோதரரின் 

மடியும் மழலையர்:மரத்துப் போனதா நம் உணர்வுகள்?


எனது வீட்டில் பல போட்டோ ஆல்பங்கள் உள்ளன. அவற்றின் அருகில் கூட நான் செல்வது இல்லை. எனது ஈராக் பயணத்தின் பொழுது எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்களை காணும்பொழுது உள்ளம் குமுறும் என்று அஞ்சி ஒரு மூலையில் விட்டு வைத்திருக்கின்றேன். இரண்டு சகாப்தங்களாக அமெரிக்கா ஈராக்கில் நடத்தி வரும் தாக்குதல்களில் உபயோகப்படுத்திய டெப்ளீடட் யுரேனியத் (DU) தின் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு ஒரு அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்தாம் அப்புகைப்படங்களில் உள்ளனர்.

இனவெறி!, இஸ்லாத்திற்கு எதிரான கொலைவெறி!


ISLAMOPHOBIA
இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீது அவதூறுகளும், அபாண்டங்களும் அள்ளி வீசப்பட்டு கொண்டிருக்கின்றன. எங்கோ இருக்கின்ற டென்மார்க் தொடங்கி அமெரிக்கா, இஸ்ரேல் என்ன? நம் கண் முன்னால் கடைகளில் தொங்கும்
தினமலர் வரை கேலி சித்திரங்களும், தகாத தவறான தகவல்களும் பரப்பப்பட்டு வருகின்றன. அதன் உச்சகட்டமாக இஸ்லாத்தையும், இறைவனின் இறுதித் தூதரான முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் மிகக் கேவலமாக
விமர்சிக்கும் ‘innocence of Muslims’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

24 முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்த ஆர்பாட்டம்...


இஸ்ரேலை முழுமையாக அழித்து விடுவோம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலை முழுமையாக அழித்து விடுவோம் - ஹிஸ்புல்லாஹ் இயக்கம் கடும் எச்சரிக்கை...............!!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அமெரிக்க படைகள் பேரழிவை சந்திக்கும் - ஹிஸ்புல்லாஹ் இயக்கம் அறிவிப்பு...............!! 

அல்லாஹ் அக்பர்... அல்லாஹ் அக்பர்...




நோற்று பெரம்பலூர் , இன்று சென்னை , இன்ஷா அல்லாஹ் நாளை இந்தியாவின் தலைநகரம்.
அமெரிக்க குறும்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணாசாலையில் 
பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் பேரணி நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதால் அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தடையை மீறி பேரணி சென்றதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தள்ளு முள்ளு மற்றும் தடியடி நடந்தது.

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

இந்த மாமா வேலையை யார் பார்த்தது ?



நம் உயிரினும் மேலான அல்லாஹ்வின் இறுதித்தூதர் 
முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தின் 
காட்சிகள் யூ ட்யூபில் வெளியானது. இது முஸ்லிம் உலகில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்திலும் பெறும் எதிர்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் திரைப்படம் தயாரித்த நக்கோலா பசிலி நக்கோலா என்பவனின் 
உருவ பெம்மையை இன்று 16.09.2012 நமதூரில் ஒரு சில இளைங்கர்களால் எரிக்கப்பட்டது. ஆனால் அந்த அயோக்கியனின் உருவபெம்பயை எரித்து அரை நேரத்தில் காவல் துறை வந்திரைங்கியது. இதில் தான் நமக்கு சந்தோகம் ஏற்பட்டுள்ளது. இந்த முனாபிக் (மாமா) வேலையை யார் செய்தது .காவல்துறை வந்ததும் த.மு.மு.க தலமையை அணுகி விசாரனை செய்தார்கள். 

ஒன்றிணைவோம்....

ஒன்றிணைவோம்....
நமது உயிரை விட மேலாக கருதப்படும் நமது தூதரை இழிவு படுத்தியதற்காக உலகமே கொந்தளித்துவரும் இந்த தருணத்தில் மார்கத்தை கட்டைபிடிக்கும் தாருஸ்ஸலாம் ஜமாத்தார்கள் ஏன் மௌனம் காக்கிறார்கள். 
காபிர்கள் மத்தியல் அழகிய முறையில் உடன்படிக்கை செய்யலாம் என்று இஸ்லாம் அறிவித்தும், ஏன் இவர்கள் அழகிய முறையில் இஸ்லாமிய அமைப்புக்களோடு உடன்படிக்கை இன்னும் செய்யவில்லை? ந்த நேரத்தில் உடன்படிக்கை செய்யாமல் ஒதுங்கி வாழ்வது வரவேர்க்கதக்கதல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

தாருஸ்ஸலாம் ஜமாத்தார்கள் மழை தொழுகை

தாருஸ்ஸலாம் ஜமாத்தார்கள் மழைக்காக தொழுகை நடத்தினார்கள்....

நமதூரில் கடந்த சிலநாட்களாக வெப்பம் அதிகமாகி வருகிறது. ஒரு சில சமயங்களில் மழை பொழிந்தாலும் கூட பகல் நேரங்களில் வெப்பம் குறையாமல் உள்ளது. இதனால் கடந்த சும்மாவில் தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் மழைக்காக தொழுகை பற்றி அறிவிப்பு செய்யப்பட்டது.

18.09.2012 அன்று சென்னையில் அனைத்து அமைப்புகள் சார்பாக அமெரிக்க தூதரக முற்றுகை !



நம் உயிரினும் மேலான கண்ணியமிக்க நபி முஹம்மது (ஸல்) அவர்களை இழிவுப்படுத்தி வெளியிட்ட திரைப்படத்தை தடைசெய்ய கோரியும், தொடர்ந்து முஸ்லிம்களை சீண்டும் அமெரிக்கர்களை கண்டித்தும் இன்ஷா அல்லாஹ் வருகின்ற செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு அனைத்து இஸ்லாமிய அமைபுகளும் ஒன்றினைது அமெரிக்க தூதரகம் முற்றுகை போராட்டம்................!!.
முஸ்லிம் சமூகமே வீறு கொண்டு எழு!!
அநாகரீக அமெரிக்கவுக்கு தக்க பாடம் புகட்ட படை திரண்டு வா........!!

சனி, 15 செப்டம்பர், 2012

அமெரிக்கா என்ற திருடன் ?

சென்னை: இஸ்லாத்தையும், இறைத்தூதர் நபிகள் நாயகத்தை விமர்சித்து அமெரிக்கர் இயக்கிய திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எகிப்து, லிபியா, ஏமன், இந்தியா என உலக நாடுகள் அனைத்திலும் அமெரிக்க தூதரகம் முன்பாக போராட்டங்கள் நடைபெற்று  வருகின்றன.
சென்னையிலும் அமெரிக்க துணை தூதரகம் முன்பாக பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்களை தினந்தோறும் நடத்திவருகின்றன. நேற்று முன்தினம் பாப்புலர் ஃப்ரண்ட் தலைமையிலும், நேற்று தமுமுக தலைமையிலும் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு முஸ்லிம்கள் போராட்டத்தை நடத்தினர்.

எங்கள் உரிமை! எங்கள் இஸ்லாம்!


இன்று நமதூரிளிருந்து பெரம்பலூருக்கு ஆர்ப்பாடதிர்க்காக TMMK மற்றும் TNTJ  இயக்கங்கள் செல்கிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்வார்கள் என்று அனைவராலும் எதிர்ப்பர்க்கபடுகிறது.
நம் குடும்பம், நம் இவுலக வாழ்வு, ஏன் நம் உயிரைவிட மேலான ரசூளுல்லாஹ்வை பற்றி தவறான வீடியோவை வெளியட்ட அமெரிக்க இஸ்ரேலியத்திற்கு எதிராக உலகமே கொந்தளித்து வரும் இந்த தருணத்தில் நமதூரிளிருந்தும் இப்படி இயக்கங்கள் செல்வது வரவேர்ப்புக்குரியது. 

கொட்டும் மழையிலும் பாபுலர் பிரான்ட் பொதுக்கூட்டம் நடந்தது.

 நேற்று நமதூரில் பலத்த காட்ருடன் கூடிய மழை பொழிந்தது.

நேற்று சுமார் 8 மணி அளவில் பலத்த காற்று வீசியது பின்பு ஒரு சில நேரேங்களுக்கு பிறகு பலத்த மழையும் பொழிந்தது.
இதனால் நேற்று அறிவிக்கபட்டிருந்த பாபுலர் பிரான்ட் பொதுக்கூட்டம் தடை பட்டுவிடும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது, ஆனால் இந்த அடைமழையிலும் தொடர்ந்து

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

வீடியோவை நீக்க முடியாது , ஹிலாரி கிளின்டன் !



வீடியோவை நீக்க முடியாது, தனிப்பட்ட நபரின் கருத்துரிமையை பரிப்பது அமெரிக்க சட்டத்திற்கு எதிரானது! – ஹிலாரி கிளின்டன்!
செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, September 14, 2012, 10:15
செய்திகள் >> முக்கியச் செய்திகள்
நேற்று (13-9-2012) வாஷிங்டன்னில் U.S.-Morocco உரையாடல் நிகழ்ச்சியில் ஹிலாரி கிளின்டன் 16 நிமிடங்கள் பேசியுள்ளார்.

நபிகள் நாயகத்தை மிகவும் கொச்சைப்படுத்தி வெளியான திரைப்படத்தினால் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் கொந்தளித்துபோயிருக்கும் நிலையில் அவர்களை மேலும் கொதிப்படைச் செய்யும் விதமாகவும், அமெரிக்க அரசு எந்த அளவிற்கு முஸ்லிம் விரோத போக்கை மேற் கொள்கின்றது என்தை உணர்த்தும் விதமாகவும் தனது உரையில் ஹிலாரி பேசியுள்ளார்.

இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்பட டிரைலர் : மத்திய அரசு தடைவிதிக்கும் !



புதுடெல்லி :இஸ்லாத்தின் இறுதித் தூதரான முஹம்மது நபி (ஸல் ) அவர்களை அவமதிக்கும் திரைப்படத்தின் டிரைலர் காட்சிகளை இணையதளங்களில் இருந்து நீக்கம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இத்திரைப்படத்தின் காட்சிகளை அனைத்து இணையதள பக்கங்களில் இருந்து நீக்கம் செய்யுமாறு ஜம்மு-கஷ்மீர் மாநில அரசு சமர்ப்பித்த மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் , கம்ப்யுட்டர் எமர்ஜென்ஸி ரெஸ்ஃபான்ஸ் டீம் இந்தியாவின் இயக்குநர் ஜெனரலுக்கு அனுப்பியுள்ளது.

வியாழன், 13 செப்டம்பர், 2012

எப்படி உருவானது எங்கே உருவானது பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம்?



தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உலகம் முழுக்க இம்மாதிரியான சம்பவங்களை நடத்தியவர்களை 'தவறாக வழிநடத்தப்பட்டவர்கள்' என்றே வரலாறு பதிகின்றது. அவர்கள் சார்ந்த கொள்கையை, மதத்தை காரணமாக காட்டியதில்லை. ஆனால் இஸ்லாம் என்று வரும்போது மட்டும், இஸ்லாம் சொல்லாத ஒன்றை சிலர் செய்யும் போது, அதற்கு மதச்சாயம் பூசி பார்க்கப்படுகின்றது.எல்லாருக்கும் உலகம் எடுத்த அளவுக்கோலை முஸ்லிம்கள் என்று சொல்லப்படுவர்கள் விசயத்திலும் இவ்வுலகம் கடைபிடித்திருக்குமானால் இப்பதிவிற்கு அவசியம் இருந்திருக்காது. 

நாங்கள் நாடோடிகள்...


நாங்கள் நாடோடிகள்...

படித்த பள்ளிக்கூடமும்
அன்பாய் இருந்த தமிழ் ஆசிரியரும்
விளையாடிய மைதானமும்
அமர்ந்து பேசிய திண்ணையும்
சுற்றி திரிந்த இடங்களும்
கண்ணுக்குள் நிழலாடுகிறது...

மனைவியின் சினுங்கலும்
பிள்ளையின் கொஞ்சலும்
நண்பர்களின் அரட்டையும்
சகோதரனின் திருமணமும்
இதயத்தில் இனிக்கிறது...

நினைவலைகள் நெஞ்சத்தின்
கரைகளை உடைத்துக் கொண்டிருக்கிறது...
இந்த அடுக்குமாடி குடியிருப்பின்
நான்கு சுவர்களுக்கிடையில்...

“ பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் “ நாப்கின் ” ” அதிர்ச்சி தகவல்


“ பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் “ நாப்கின் ” ” அதிர்ச்சி தகவல்

“ உடல் ஆரோக்கியத்தைக் காக்க வேண்டும் என்று நாம் விலை கொடுத்து வாங்கும் பொருட்களே , நமக்கு ஆரோக்கிய கேட்டினை ஏற்படுத்தும் காரணியாக இருந்தால்...? அதுதான் நடக்கிறது பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் “ நாப்கின் விடயத்தில் ” அதிர்ச்சியான தகவல் சொல்கிறார் பேராசிரியர் முகம்மது ஷாபீர்.

“ பயோடெக்னோலஜீ ” துறையில் ஆய்வு செய்துவரும் இந்தியாவை சேர்ந்த ஷாபீர் அதன் ஒரு பகுதியாக “ நாப்கின் ” பற்றி தான் மேற்கொண்ட ஆய்வுச் செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்.

புதன், 12 செப்டம்பர், 2012

அநீதமாக நடத்தப்படும் முஸ்லிம்களுக்காக நமதூரில் பொதுக்கூட்டம்.

நமதூரில் பேருந்துநிலையத்தில் இந்த அறிவிப்பைசெய்திருப்பது எதிரிகளுக்கு அச்சத்தை உண்டாக்குவது மட்டும் அல்லாமல், ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு பாரம்பட்சம் காட்டும்,  இந்த அரசையும் வன்மையாக கண்டிக்கப்படுகிறது.

நமதூர் கடந்துவந்த பாதையும், தொலைநோக்கு பார்வையும்.


நமதூர் கடந்துவந்த பாதையும், தொலைநோக்கு பார்வையும்.
ஒரே ஊரில் எப்படி இந்த பிரிவு ஏற்பட்டது? (வரலாறு தெரிந்தால் மட்டுமே அதுசம்மந்தமாக சரியான தீர்வை எடுக்கமுடியும்)
முதலில் மேற்கு (அப்போது மேற்கு கிழக்கு என்று பிரிவு இல்லை) ஒரே பள்ளிவாசல் தான் மேற்கில் இருந்தது. காலங்கள் செல்ல செல்ல மக்கள் தொகை அதிகரிப்பதன் விளைவாக கிழக்கிலும் பல குடும்பங்கள் குடியேற துவங்கியது. இதன் காரணமாக கிழக்கில் ஒரு பள்ளிவாசல் கட்ட நிர்பந்தம் ஏற்பட்டது. அப்போது மேற்கு ) ஒரே ஜமாத்துதான் அதன் மூலமாக ஊரில் உள்ள அனைவர்களும் சேர்ந்து கிழக்கிலும் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. இதனால் இங்கே ( கிழக்கே )ஜும்மா தொழுகையையும் நடத்திவரப்பட்டது.

மில்லத் கல்வி அறக்கட்டளை புதிய நிர்வாகிகள் கூட்டம்....


மில்லத் கல்வி அறக்கட்டளையின் தலைமை நிர்வாகிகள் கூட்டம் கடந்த 07.09.2012 வெள்ளி கிழமை அஸர் தொழுகை பிறகு துபையில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கடந்த ரமலானில் மில்லத் கல்வி அறக்கடளை வளர்ச்சிக்கு வசுல் செய்த தொகையை மில்லத் கல்வி அறக்கட்டளை புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது. பின்னர் கல்வி உதவி தொகைக்கு ஊரில் விண்னப்பித்தவர்களின் விண்னப்பத்தை பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் வைட்டமின் “ ஏ ”


புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் வைட்டமின் “ ஏ ” சிறந்த முறையில் செயலாற்றுவதாக இங்கிலாந்து உள்ள யார்க் பல்கலை ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பை புற்றுநோய் சிகிச்சையில் “ புதிய உதயம் ” என்றே இவர்கள் வர்ணிக்கின்றனர்.

கேன்சர் உருவாக்காக் கூறுகளுக்கும் , வைட்டமின் ஏ பற்றாக்குறைக்கும் தொடர்பிருப்பதாக இவர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். இதனால் புற்றுநோய் சிகிச்சையில் வைட்டமின் ஏ யை பயன்படுத்தலாம் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தினமும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுப்பொருட்களில் வைட்டமின் ஏ நிரம்பிய சத்துக்களை சேர்க்குமாறு இவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.