நமதூரில் குரங்கு அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது.
நமதூரில் குரங்குகள் அதிகமாக உள்ளது தாங்கள் அறிந்ததே ! ஆனால் அது இப்போது நமதூரை அட்டகாசம் செய்து வளம் வருகிறது.
வீட்டில் உள்ள அரிசிகளை கூட வலுகட்டாயமாக எடுத்துக்கொண்டு செல்கிறது. இந்த அநியாயத்தை தட்டிகேட்க யாருமில்லையா.....
தெருவில் உள்ள பொதுமக்கள்: நாங்க மொட்டமாடில எதுவும் காயப்போட முடில. எதுபோட்டாலும் அதை நாசமாக்கி விட்டு போய்விடுகிறது.
பெட்டி கடை காரர்கள்: ஒரு முட்டைய கூட வெளீல வைக்கமுடில வாயிலே கைலேன்னு எடுத்துட்டு போய்டுது (கைல கெடச்சுது செத்துச்சு).
சிறுவர்கள் : கல்லால அடுச்சா உர்ர்ருன்னு கடிக்க வருது. வாழைபழம், முட்டாய் ஏதாவது திண்ணா புடிகிட்டு போய்டுது.
குட்டி குரங்கு : அம்மா எனக்கு சோறு வேணும்.
அம்மா குரங்கு : (தன் புருசனிடம்) ஏங்க புள்ளைக்கு சோறு வேணுமாம்!
அத்தா குரங்கு : எந்தவீட்டு சோறு வேணும்னு சொல்லு! அந்த வீட்ல போய் நாசம் பண்ணி புள்ளைக்கு சோறு கொண்டு வரலாம், எவண்டி நம்மள கேப்பான். பஞ்சாயத் அலுவலகத்திலிருந்து வந்து நம்மள புடிசிடுவார்களா? முடிந்தால் முடித்து பார்க்கட்டும்!
இப்படி பட்ட சவால்களை சந்திக்க தயாரா? நமது பேரூராட்சி தான் பதில் சொல்ல வேண்டும்.
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக