Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் வைட்டமின் “ ஏ ”


புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் வைட்டமின் “ ஏ ” சிறந்த முறையில் செயலாற்றுவதாக இங்கிலாந்து உள்ள யார்க் பல்கலை ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பை புற்றுநோய் சிகிச்சையில் “ புதிய உதயம் ” என்றே இவர்கள் வர்ணிக்கின்றனர்.

கேன்சர் உருவாக்காக் கூறுகளுக்கும் , வைட்டமின் ஏ பற்றாக்குறைக்கும் தொடர்பிருப்பதாக இவர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். இதனால் புற்றுநோய் சிகிச்சையில் வைட்டமின் ஏ யை பயன்படுத்தலாம் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தினமும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுப்பொருட்களில் வைட்டமின் ஏ நிரம்பிய சத்துக்களை சேர்க்குமாறு இவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


புரோஸ்டேட் கேன்சர் செல்கள் மீது நடத்திய ஆய்வில் இவர்கள் இந்த வைட்டமின் ஏ தொடர்பை நிலைநாட்டியுள்ளனர். ஆனால் யார்க் பல்கலை பேராசிரியர் , நார்மன் மெய்ட்லேன்ட்  இதனை மற்ற கேன்சர்களுக்கு பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளனர்.

உடனே மெடிக்கல் ஷாப்பிற்குச் சென்று வைட்டமின் ஏ மாத்திரைகளை வாங்கிப் போட்டுக் கொள்ளவேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஏனெனில் மாத்திரை வடிவங்களில் ஓவர் டோஸ் ஆனால் அதுவே நச்சாகவும் கேன்சர் உருவாக்க காரணைகளாகவும் மாறிவிடும் என்று இவர் எச்சரித்துள்ளார்.

மாறாக தின்சரை உணவில் வைட்டமின் ஏ உள்ள எண்ணெய்ச் சத்துள்ள மீன் , கேரட்கள் , லிவர் , சிகப்பு மிளகு மற்றும் பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும் என்கிறார் இவர். புற்று நோய் உருவாகி விட்டாலும் சிகிச்சையில் வைட்டமின் ஏ யை பயன்படுத்தினால் அது பரவுவதை திறம்பட தடுக்க முடியும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஏற்கனவே கேன்சர் சிகிச்சையில் “ ரெடினாய்க் ஆசிட் ” பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கேன்சர் நோய் வருவதால் ஏற்படும் இறப்பை 80 % தடுக்க முடிகிறது என்று கூறியுள்ளது இந்த ஆய்வு.

பொதுவாக “ புரோஸ்டேட் கேன்சர் ” காரணிகளை ஆராயும் போது ரத்தத்தில் வைட்டமின் ஏ அளவு குறைவாக இருப்பதை ரத்த மாதிரிகளில் கண்டிருக்கின்றன. ஆனால் இதன் செயல்பாட்டை யாரும் தெரிவிக்கவில்லை. இப்போது உயிரியல் தொடர்பை இந்த ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆய்வின் முழு விவரம் “ நியுக்ளீக் ஆசிட் ” என்ற பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக