நமதூரில் பள்ளி கூடங்கள் வண்டவாளம்!
குழந்தைகளை கோயில் படங்களை ஓட்டசொல்வது, இந்து கலாச்சாரம் மற்றும் பண்டிகைகளை விலாவரியாக சார்ட் அட்டையில் ஒட்டி விளக்கமாக அதை குறிப்பிட செய்வது, போன்றவைகளை அப்துல்லசா பள்ளிகூடங்கள் செய்துவருகிறது. இதில் இஸ்லாமியர்களின் கலாச்சாரம் எதயும் குறிப்பிட படவும் இல்லை!
இதையும் மிஞ்சியது ஆசியா பள்ளி கூடம்.
நந்தி சாமி சிலைகளை ஐந்தாம் படிக்கும் குழந்தைகளை வரைய சொல்லயுள்ளனர். அதையும் தெளிவாக சார்ட்டில் வரைய வேண்டுமாம்.
இஸ்லாமிய கல்வியை கொடுக்க வேண்டிய இவர்களே, தவறான பதையில் செல்வதை நிறுத்தவேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியும் இஸ்லாமிய ஒழுக்கமும் வேண்டும் என்பதினால்தான் இஸ்லாமிய கல்விகூடங்களில் சேர்கின்றனர், இந்த கல்விகூடமும் மாற்றுமத கல்விக்கூடம் போல் இருந்தால் இதைவிட சிறந்த மாற்றுமத கல்வி நிறுவனத்தில் குழந்தைகளை சேர்க்க நேரிடும். (அல்லாஹ் நம் அனைவரின் குழந்தைகளை நேர் வழியில் நடத்துவானாக!)
கல்விக்கூடங்கள் லாப நோக்குடன்தான் அனைவரும் நடத்திவருகின்றனர். இதில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல! என்பதுதான் நமக்கு நன்றாக தெரியவருகிறது!
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக