Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

லப்பைகுடிக்கட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் 500 ருபாய் அபராதம்!


லப்பைகுடிக்கட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் 500 ருபாய் அபராதம்! வியாபாரிகளுக்கு 1000 ருபாய் அபராதம்! தயாரிப்பாளர்களுக்கு?
நமதூரில் கடந்த சில நாட்களுக்கு முன் அரசு சார்பாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுகளை நாம் நம்முடைய இனைய தளத்தின் மூலம் பார்த்தோம்.
இதை எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வரவேர்க்கவேண்டியதுதான் ஆனால், இது பேரூர்ஆட்சியில் எங்கும் இதை அமுல் படுத்தியதாக நமக்கு தெரியவில்லை. நமதூருக்கு மட்டும் சில ஆர்வகோலாருகளால்
வந்திருப்பது சில வியாபாரிகளை பாதிப்புக்கு உள்ளாக்கும் என்று மட்டும் தெரிகிறது.
இந்த அரசு அனைத்து பிளாஸ்டிக்குகளை முற்றிலும் ஒழித்து கட்ட முடியாது! ஆனால் சிருவியாபரியானாலும் பெரிய வியாபாரியானாலும் தேவையில்லாமல் பயன்படுத்தும்  பிளாஸ்டிக்குகளை பாரம்பட்சம் பார்க்காமல் நடவடிக்கைஎடுக்கவேண்டும். 
சிறு வியாபாரி பயன்படுத்தும் தேநீர் டம்ளர் மற்றும் கீஸ் (பை) தடை படுத்துமானால், குர்குரே (சிப்ஸ் ஐடம்ஸ்) பிஸ்கட் பாக்கெட் மற்றும் தேவையில்லாமல் பிளாஸ்டிக்கில் பயன்படுத்தக்கூடியவைகளையும் தடைசெய்ய வேண்டும் என்பதை நம்முடைய (Labbaikudikadunews.blogspot.com) இந்த இணையதளத்தின் மூலம் கேட்டுகொள்கிறோம்.
இது இப்படியிருக்க அரசுடைய நிலை நமக்கு வேடிக்கையாகத்தான் உள்ளது. காரணம் .
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்பது சட்டம்! ஆனால் அரசு டாஸ்மார்க் பாருக்கு பக்கத்தில் டூவீலர் நிறுத்துமிடம் வைத்திருக்கிறார்கள். என்னகாரணம்? 
நமது நிருபர். 

2 கருத்துகள்:

  1. //மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்பது சட்டம்! ஆனால் அரசு டாஸ்மார்க் பாருக்கு பக்கத்தில் டூவீலர் நிறுத்துமிடம் வைத்திருக்கிறார்கள். என்னகாரணம்? //

    நல்ல கேள்வி, ஆனால் காஃபிகளின் ஆட்சியில் இது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காது...

    பதிலளிநீக்கு
  2. asalamu alaikum

    it is nessary action by municipality . i congratgulation to bring such law
    clean is most important. lbknews in double game , publishing cleanness in lbk, but opposing this law , WHY ????????

    LAW SHOULD BE SUPPORTED BY LBK GOOD WISHERS

    Which one is we can do we should do
    which one not in our hand we will not ask for that

    பதிலளிநீக்கு