திடீர் குப்பம் வாவுசும், பிஸ்மில்லா நகர் நன்னி அத்தாவும்.
அத்தா : யாரது வாவுசு போல தெரிது, அஸ்ஸலாமு அழைக்கும், வா வாவுசு நல்லா இருக்கியா?
வாவுசு : வா அழைக்கும் சலாம், நல்லா இருக்கேன் மச்சான். நீங்க எப்படி இருக்கீங்க?
அத்தா : அல்லாஹ்ம்துலில்லாஹ், நல்லா இருக்கேன். நீ எங்க இவ்வளவு தூரம் ?
அத்தா : எங்க முன்னைருந்ததுபோல போகமுடீது, இனிமேல நம்ம பிள்ளைகளைதான் சமுதாய சிந்தனையோடு வளர்க்க வேண்டும்.
வாவுசு : உலகத்துல இவ்வளவு ஆர்பாட்டம் நடக்குது. நமதூர்லமட்டும் எதுமே நடக்காததுபோல எப்படி காட்டமுடிது.
அத்தா : எல்லாம் சுயநலம் தான். தனக்கென்று வரும்பொழுதுதான் மற்றவர்களின் உதவியை தேடுகின்றார்கள்.
வாவுசு : ஏதோ LABBAIKUDIKADUNEWS ன்னு இணையதளத்துல நமதூர் செய்தி வருதாமே!
அத்தா : ஆமா ! அவிங்க எவ்வளவு நாளோ ! நமதூர்ல இருந்து ஆதரவு சிலர் கொடுப்பார்களே தவிர யாரும் இறங்கி செய்வதற்கு ஆள் இல்லை! அவர்களுக்கு கூட ஆதரவு கொடுத்தும், மிரட்டியும் தான் கடிதம் செல்கிறதாம். ஆனால் நமதூர் முன்னேற்றத்தை கருதி யாரும் இதுவரை கடிதம் எழுதவில்லை என்று தான் அவர்களின் ஆதங்கமாக உள்ளது.
வாவுசு : அதுவும் சரி, யார் அணுஅளவு நன்மை செய்தாலும் அல்லாஹ் அதை பார்க்காமலா இருக்கான் ?
அத்தா : சரியா சொன்ன வாவுசு. இந்தா வாவுசு டீ குடி !
வாவுசு : ம். ஏன் மச்சான் முஸ்லிம்களின் எதிராக சர்ச்சைக்குரிய அந்த படம் எடுக்க என்ன வேலை இருக்கிறது. படம் எடுத்தவன் ஒருமணிநேரம் நமதூர் திடீர் குப்பத்துக்கு வந்தான் என்றால், அவனுடைய மவுத்து என்கையாலதான், என்று நான் நீயத்து வைத்து விட்டேன் மச்சான்.
அத்தா : அல்ஹம்துலில்லாஹ், வாவுசூ உலகமே இன்று இஸ்லாத்தின் பக்கம் பார்வை திரும்பியிருக்கிறது. காரணாம் இதில் என்ன இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்பவர்கள் எல்லாம் இந்த இனிய மார்கத்தில் நுழைந்து விடுவதுதான். இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் எதிரிகள் கூட இதில் விதிவிலக்கல்ல. இதை அமெரிக்க யுதர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் என்ன செய்வதுன்னு தெரியாம தாங்களே மண்டைய குழப்பிகொள்கின்றனர்.
வாவுசு : காபிர்கள் அல்லாஹ்வின் ஒளியை ஊத்தி அனைத்து விடலாம் என்று நினைத்து கொண்டிருக்கின்றனர், அவர்கள் வெறுத்த பொழுதும் அல்லாஹ் அவனுடைய ஒளியை (மார்கத்தை) மேலோங்க செய்வான்.
அத்தா : சரியா சொன்ன வாவுசு, எங்க வாவுசு கிளம்பிட்ட.....
வாவுசு : மக்ரிபு நேரம் ஆகபோகுது. அடுத்தவாரம் பாப்பா வீட்டுக்கு வருவேன். அப்போ வர மச்சான்.
அத்தா : வந்தா கண்டிப்பா சாப்டுத்தான் போகணும்.
வாவுசு : சரி மச்சான் அஸ்ஸலாமு அழைக்கும்
அத்தா : வா அழைக்கும் சலாம்...
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக