Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

நமதூரில் 360 குடும்பங்களின் நிலை என்ன?

நமதூரில் 360 குடும்பங்களின் நிலை என்ன?
நாம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக குறைதீர்க்கும் முகாம் நமதூரில் நடைபெற்றதையும், அதன் விளக்கத்தையும் நமது இனைய தளத்தின் வாயிலாக பார்த்தோம். அதில் நமதூரில் வீடு இடித்தலை பற்றியும் தி மு க மற்றும் அதிமுக நிலைபாடுகளையும் நம்மால் உணர முடிந்தது.
இதை பற்றி பேசி இரண்டு நாட்களில், இந்த விஷயம் அதிவேகமாக அரசு கையாள தயாராக உள்ளதாக நமக்கு செய்திகள் தெரியவந்துள்ளது. 
நமதூர் வாசிகளின் நிலைப்பாடு:
வழக்கம் போல் இதிலும் நமது ஜமாஅத் மௌனம் சாதித்துள்ளது. இதில் வீடு கட்டியவர்களின் நிலையை பற்றி சமுதாய அக்கறையோடு பள்ளிவாசலில் கூடி பொதுமக்கள் கருத்தை தெரிந்துக்கொள்ளும் விதமாக எதையும் ஏற்படுத்தவில்லை. அப்படி பேசப்பட்டது என்றால் இரண்டு ஜமாத்தும் இணைந்து இதைப்பற்றி பேசினார்களா? பேசி எடுக்கப்பட்ட முடிவை ஏன் இன்னும் மக்கள் மத்தியில் கொண்டுவரவில்லை? இன்னும் இந்த அரசை  நம்பி இருந்தால், நாளை நமதூரே கேள்விக்குறியாகிவிடும்! மறுக்க முடிமா ? பாதாள சாக்கடை திட்டம், ஊர் பெயர் மாற்றாமல் இருப்பது , நமதூர் எல்லையை விரிவுபடுத்த முயற்சி எடுக்காமல் இருப்பது, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.....
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி என்று இரண்டு முறை இந்த அரசு ( எதிர்கட்சியாகட்டும், ஆளும்கட்சியாகட்டும் ) நமது பிரதான சாலையிலும் ஏன் நம் தெருவிலும் கூட கைவைத்தது. ஆனால் இந்த ஆக்கிரமிப்பு திட்டக்குடி முதல் திருமாந்துறை வரை என்றால் ஏன் இவர்கள் திட்டக்குடி அல்லது  திருமாந்துறை முதல் தொடங்கவில்லை. முதலில் ஏன் நமதூரில் இருந்து ஆரம்பம் செய்கிறார்கள். கேட்டால் பேரூராட்சி என்று நமதூர் அரசியல் வாதி சப்பைக்கட்டு கட்டுகிறான். பேரூராட்சி என்றால் நமதூரில் மட்டும் தான் சாலையை அகலபடுத்த பட வேண்டுமா? ஏன் மற்ற ஊரில் உள்ள ஆக்கிரமிப்புகளை இவர்களால் அகற்ற முடியவில்லை. ஏன்னெனில் அவர்கள் இடம் ஒற்றுமை உள்ளது. தேவை இல்லாமல் இந்தமுறை சாலையை அகலப்படுத்துகிறோம் என்று சொல்லி சில வீடு மற்றும் கடைகளின் முகப்புகளை இடித்தார்கள். இதன் மூலமாக மற்ற ஊர்  சாலையில் கைவைக்கமுடிந்ததா?  சட்டம் எல்லோருக்கு ஒன்றாக இருக்கவேண்டும். 
ஆத்து கொல்லையில் வீடு இடிப்பதைபற்றி திமுக மற்றும் அதிமுக நமதூர் இரு கட்சிகாரர்கலுமே கைவிரித்துவிட்டார்கள் என்பதுதான் மறைக்கப்பட்ட உண்மை. எலக்சன் வருவதற்கு முன் நாங்கள் இதை பார்த்து கொள்கிறோம் என்று இவர்களால் கூற முடிமா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றுதான் வழக்கம்போல் கூறுவார்கள். 
இதுபோல் மற்ற ஊரில்:
இதுபோல சம்பவம் ஒரு முஸ்லிம் மக்கள் வாழும் ஊரில் நடைபெற்றது ( ஊர் பெயர் சரியாக தெரியவில்லை ) அந்த ஊரில் உள்ள அனைவர்களும் சேர்ந்து ஒரு மனு எழுதி அதை கலெக்டர்ரிடம் கொண்டு சேர்த்தார்கள். அதில் எங்கள் ஊருக்கு வெள்ளம் ஆபத்து ஏதேனும் வந்தால் அதற்க்கு நஷ்டஈடாக ஏதும் நாங்கள் இந்த அரசிடம் கேட்கமாட்டோம் என்று குறிப்பிட்டு இருந்தார்கள் இதனால் அந்த பணி நிறுத்திவைக்கப்பட்டு விட்டது என்று ஒருவர் குறிபிட்டார். இது எங்கு நடைபெற்றது என்று நமக்கு சரியாக தெரியவில்லை என்றாலும், இதுபோல் நமது ஊரில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து இரு மஹல்லம் கூடி ஒருமித்த கருத்தோடு செயல்படுத்தி காட்ட ஏன் நம்மால் முடியாது என்பதுதான் நமது கேள்வியாக உள்ளது.
நமது நிருபர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக