Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 6 செப்டம்பர், 2012

தீன் இயக்கமும் புதிய நிர்வாகிகளும் !!!


தனி நபர்களின் சீர்திருத்தம் தான் ஊரின் சீர்படுத்த முடியும். மனிதர்களை வழிநடத்த இறைவனால் வழங்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தை செயல்படுத்திக் காட்டிய நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள்
இதனை மிகவும் அழகாகவே நடைமுறைப்படுத்தி காட்டினார்கள். வரலாற்றால் ஒதுக்கி வைக்கப்பட்ட அந்த அரேபிய சமூகத்தில் அவர்கள் தனி மனிதர்களை உருவாக்கினார்கள். பின்னர் அவர்களை 
வரலாற்றின் கதாநாயகர்களாக மாற்றினார்கள். ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் இந்த பொறுப்பிற்கு நாம் எவ்வாறு பதில் சொல்லப்போகிறோம் என்றுதான் அஞ்சினார்கள். மாறாக நாங்கள் பதவிகளில்
இல்லை என்றாலும் எங்களை கவுர்வத் தலைவர்களாக வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று முன்னால் தீன் இயக்க தலைவர்கள் போல் அன்றைய நபித்தோழர்கள் கனவிலும் கூட நினைத்து பார்க்க வில்லை.


அந்த பொற்காலத்தில் இருந்து ஒரு சம்பவம் எடுத்து கூறினால் இவர்கள் இவர்களுக்கு பொறுத்த மானதாக இருக்கும். 

உமர் ( ரலி ) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஒரு போர் நடைபெற்று முடிந்தது. வெற்றிப் பொருட்கள் பங்கு வைக்கப்பட்டதில் அனைவருக்கும் ஒரு சட்டை கிடைத்தது. அதிபருக்கும் ஒரு சட்டை கிடைத்தது. சில தினங்கள் கழித்து கலீஃபா மற்றுமொரு புத்தாடையை அணிந்திருப்பதை கண்ட ஒருவர் கேட்டார், “கலீஃபாவே, உங்களுக்கு மட்டும் எப்படி இரண்டு ஆடைகள் கிடைத்தன?” தன் மகனை நோக்கி கையை நீட்டினார் கலீஃபா, “எனக்கு கிடைத்த சட்டையைதான் நான் எனது தந்தைக்கு வழங்கியுள்ளேன்”
என்று பதிலுரைத்தார் மகன். ஒரு சட்டை அதிகமாக கிடைத்ததாக சந்தேகம் இருந்தால் கேள்வி கேட்கும் உரிமையும் இருந்தது. அதிபருக்கு பதில் அளிக்கும் கடமையும் இருந்தது. இது போன்ற ஏராளமான சம்பவங்களை காணலாம் அந்த வரலாற்றில்.

இத்தகைய தனிநபர் தயாரிப்புகளில் முக்கிய பங்காற்றியது மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கை மீதான நம்பிக்கை. இவ்வுலகில் நாம் விதைக்கும் விதைகளுக்கான அறுவடையை அந்த மறுமையில் தான் 
கண்டு கொள்ள முடியும். பெறுமைக்காக இந்த உலகத்தில் பதவிகளில் இருக்கலாம். ஆனால் மறுமையில் இதற்கான எந்த வாய்ப்பும் கிடையாது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக