Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 22 செப்டம்பர், 2012

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல் அறிவிப்பு!


சென்னை: தமிழக வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் 7, 14, 21 ஆகிய தேதிகளில் இதற்கான வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் பேசியபோது வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் அக்டோபர் 1 முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 2013 ஜனவரி மாதம் 1-ம் தேதியோடு 18 வயது பூர்த்தி அடைய இருப்பவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இப்போதே விண்ணப்பிக்கலாம் என்றார்.


மேலும் தாலுகா அலுவலகங்கள், வாக்குச் சாவடிகள் ஆகிய இடங்களிலும் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம். இதற்காக அக்டோபர் 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவற்றை தாலுகா அலுவலகங்கள், வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் பார்வையிடலாம். இணையதளம் மூலமும் பார்க்கலாம்.அக்டோபர் 6, 9 தேதிகளில் கிராம சபை கூட்டங்கள், குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டங்கள் ஆகியவற்றில் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் முன்னிலையில் படிக்கப்பட்டு, தவறுகள் நீக்கப்படும்.
அக்டோபர் 7, 14, 21 மூன்று ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
.இது தவிர தமிழகம் முழுவதும் உள்ள 4,089 வங்கிக் கிளைகள், 7,343 அஞ்சல் அலுவலகங்கள் மூலமும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து மக்களிடம் பிரசாரம் மேற்கொள்ளப்படும். இதற்காக வங்கிகளில் போஸ்டர்கள் ஒட்டப்படும்.இணையத்தில் சரி பார்க்கலாம்: வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்த்தவர்கள் தாங்கள் அளித்த விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை விண்ணப்பித்த 10 நாள்களுக்குப் பிறகு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சரிபார்க்கலாம்.
கால் சென்ட்டர்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தம் செய்வது தொடர்பான விவரங்களைப் பெற கால் சென்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு காலை 10 முதல் மாலை 6 மணி வரை தகவல்களைப் பெறலாம் என்றும் பிரவீண் குமார் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக