Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

துபாயில் ‘ஜிடெக்ஸ் ஷாப்பர்’ துவக்கம்!


Dubai World Trade Centre. GITEX Shopper
துபாய்:மேற்காசியாவில் மிகப்பெரிய தகவல் தொழில் நுட்ப, மின்னணு பொருட்களின் கண்காட்சியான  (Gitex Shopper) ‘ஜிடெக்ஸ் ஷாப்பரை’ நேற்று (29-09-2012) துபாய் கல்ச்சர் அண்ட் ஆர்ட்ஸ் அதாரிட்டி தலைவரான ஷேக் மாஜித் பின் முஹம்மது ராஷித் துவக்கி வைத்தார். வேல்ட் ட்ரேட் செண்டரில் நடைபெறும் இந்த வர்த்தக திருவிழாவில் நேற்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.
நுகர்வோரை கவருவதற்காக பல்வேறு எலக்ட்ரானிக் நிறுவனங்கள் மிகப்பெரிய சலுகைகளுடன் 8 தினங்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பங்கேற்றுள்ளன.

எல்.ஜி நிறுவனம் உலகிலேயே மிகவும் கனம் குறைந்த தொலைக்காட்சிகளுடன் ஜிடெக்ஸில் பங்கேற்கிறது.
மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகச்சிறந்த தயாரிப்புகள் இத்திருவிழாவில் அனைவரையும் ஈர்க்கும். 30 ஆயிரம் பல்வேறு தயாரிப்புகளுடன் 120 நிறுவனங்கள் ஜிடெக்ஸில் பங்கேற்கின்றன. நுகர்வோருடன் தொடர்பை ஏற்படுத்தும் மிகச்சிறந்த வாய்ப்பாக ஜிடெக்ஸ் அமைந்துள்ளது என்று இ-மேக்ஸ்(E-Max) சி.இ.ஒ நிலேஷ் பட்நாகர் கூறுகிறார்.
காலை 11 மணிமுதல் இரவு 10 மணி வரை கண்காட்சி நடைபெறும். நுழைவுக் கட்டணம் 30 திர்ஹம். தகவல் தொழில் நுட்ப துறையில் ப்ரொஃபஸனல்களை அதிகம் ஈர்க்கும் ஜிடெக்ஸ் டெக்னாலஜி வீக் அடுத்த மாதம் (அக்டோபர்) 14 ஆம் தேதி முதல்18-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த எக்ஸ்பிஷனில் இந்தியாவைச் சார்ந்த 40 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
தகவல் அமீரகத்தில் இருந்து நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக