Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

தொலைந்து போன லெப்பைக்குடிக்காடு பொழுதுபோக்கு அடையாளங்கள் !!!


கபடி ...கபடி என்று
கைகொருத்தாடிய
தெருக்களெல்லாம்
கபளிகரமாக கையாடப்பட்ட
வேதனையை என்சொல்வேன்...

பள்ளியிலும் மதரஸாவிலும்
பாசத்தோடு
பாடங்களைபடித்து விட்டு
பாங்கான நண்பர்களை
பகுதியாய் பிரித்துக்கொண்டு
அடுப்புச்சாம்பலால்
ஐந்து கோடுகளாய்
அடையாளமிடப்பட்டு
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அரை நிர்வாணமாய்
கோமளத்தை
...தெரிய மடித்துக்கொண்டு
குஸ்த்திபடி குதித்தாடிய
தெருக்களெல்லாம்
படிகளாலும் படுகுழிகளாலும்
பயணிக்க முடியாமல்
பழுதடைந்து போகும்
வேதனையை என்சொல்வேன்...



அவரவர் கட்டும் வீடுகளால்
அரைத்தெருவை
அபகரித்துக்கொண்டு
அடுத்தவரை
அல்லல்பட வைப்பதில்
அவர்களுக்கென்ன ஆனந்தம்
இரண்டு ஆட்டோவரக்கூட
இடமில்லாது இடத்தை
இடைமரித்துக் கொண்டதை
இல்லை...
இறந்தபின்
இறுதி ஊர்வலத்திற்கு
இட்டுச்செல்லும் சந்தூக்கை
சரியாய் வைக்ககூட
வகையில்லாமல் போன
வேதனையை என்சொல்வேன்...

தெருவுக்கு நாலு பாவிட்டு
பசைகுடித்தத் தெருவெல்லாம்
பாவாத்தும்
பாதங்களால் அல்லவா
பதிந்ததும் விரிந்ததும்
கோலியாடவும்
செல்லாங்குச்சியாடவும்
கொடிகட்டக் களை(கம்பு)நடவும்
குழிதோண்டும்போதெல்லாம்
குச்சிபிடித்த கையல்லவா
கோரை(காய)ப்பட்டது
கண்ணாம்புச்சியாடவந்து
சாட் புட் த்திரி சொல்லி
சாட்பாலாடினாலும்
அவ்வாபெந்தாடினாலும்
இருட்டிலே ஓடினாலும்
இடறிடாமல்
விரிந்திருந்த தேனன்று
வெளிச்சம் வந்த பின்னும்
விரைகின்ற எங்களை
கீழே விழத்தாட்டும்
வேதனையை என்சொல்வேன்...

நீளுகின்ற பாதையெல்லாம்
ஊர்தோறும் விரிகின்றபோது
நீண்டு நின்ற நீயெல்லாம்
நெருங்கியதால்
கபடியாட காளையர்
காணாமல் போன
வேதனையை என்சொல்வேன்...

இன்ஷா அல்லாஹ் மீண்டும் ஒரு ஆரோக்கியத்தின் மடலில் சந்திப்போம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக