Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 12 செப்டம்பர், 2012

நமதூர் கடந்துவந்த பாதையும், தொலைநோக்கு பார்வையும்.


நமதூர் கடந்துவந்த பாதையும், தொலைநோக்கு பார்வையும்.
ஒரே ஊரில் எப்படி இந்த பிரிவு ஏற்பட்டது? (வரலாறு தெரிந்தால் மட்டுமே அதுசம்மந்தமாக சரியான தீர்வை எடுக்கமுடியும்)
முதலில் மேற்கு (அப்போது மேற்கு கிழக்கு என்று பிரிவு இல்லை) ஒரே பள்ளிவாசல் தான் மேற்கில் இருந்தது. காலங்கள் செல்ல செல்ல மக்கள் தொகை அதிகரிப்பதன் விளைவாக கிழக்கிலும் பல குடும்பங்கள் குடியேற துவங்கியது. இதன் காரணமாக கிழக்கில் ஒரு பள்ளிவாசல் கட்ட நிர்பந்தம் ஏற்பட்டது. அப்போது மேற்கு ) ஒரே ஜமாத்துதான் அதன் மூலமாக ஊரில் உள்ள அனைவர்களும் சேர்ந்து கிழக்கிலும் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. இதனால் இங்கே ( கிழக்கே )ஜும்மா தொழுகையையும் நடத்திவரப்பட்டது.

காலப்போக்கில் வரவு செலவு பிரச்சனையும் வழக்கம் போல் ஏற்ப்பட்டது. இதன் விளைவாக கிழக்கில் ஒருசில இடங்களை வாடகைக்கும் விடப்பட்டு அதன் வரவு செலவுகளை தாங்களே பார்த்துக்கொண்டனர். நாங்கள் வசூல் செய்து, பள்ளி நிர்வாகத்தை தேர்ந்தெடுத்து இனி நாங்களே கிழக்கே உள்ள இந்த ஜமாத்தை வழிநடத்துகிறோம் என்று கூறியதன் விளைவாக கபர்ஸ்த்தான் வரை இந்த பிரச்சனை தலையெடுத்தது. நேற்றுவரை இவர்கள் நம்மோடு இருந்து இன்று கிழக்கு  என்று உருவாக்கி சென்றதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் வரவு செலவு இவர்களே பார்த்தது தான்.
பழங்காலத்தில் இவர்கள் அடித்துக்கொன்டதன் விளைவாக இன்றும் ஒருசில ஆட்கள் மத்தியில் இவண் மேற்குத்திகாரன் , இவன் கிழக்குத்திகாரன் என்று ஏளனமாக பேச்சு பார்க்கமுடியும், இவர்கள் இடத்தில் ஒருவன் நம் ஊரை பத்தியோ அல்லது நம் சமுதாயத்தை பத்தியோ ஏளனமாக பேசினால் அவர்கள் சிரிப்பார்கள். (காரணம், தான் இருக்குமிடம் தன் இனத்து மக்கள் வாழ்கிறார்கள் என்பது போல அவர்கள் மனதில் ஒரு இனம்புரியாத வெறுப்பாக மாறியது).
ஆனால் இன்று உருவாக கூடிய தலைமுறை அப்படியல்ல.! அப்படி விட்டுவிடவும் எங்களால் முடியாது! இஸ்லாமிய கல்வியை கொடுக்கும் விதத்தில் இவர்களுக்கு கொடுத்தால், இதுவரை பார்த்திடாத ஒரு புதிய சமுதாயத்தை  உங்கள் பிள்ளைகளே வழிநடத்தும், என்பது யாராலும் மறுக்கமுடயுமா?
மேற்கு ஜமாத்துக்கு கடை அதிகம் அதனால் அவர்களுக்கு வரவு அதிகமாக உள்ளது. கிழக்கு ஜமாத்துக்கு உட்பட்ட பகுதியில் தான் அரசு அலுவலகங்களும்  வளர்ச்சியும் அதிகம், என்று முட்டாள் தனமான வாதங்களை கொண்டே நம்மை சிந்திக்க விடாமல் ஒருசிலர் ஆக்குகின்றனர்.
இவர்களிடம் நாம் கேட்பது என்னவென்றால்? இவர்களுடைய வரவு செலவு மற்றும் கடைகளை வைத்து இவர்கள் மறுமைக்கு கொண்டு செல்ல முடியுமா? யார் ஆட்சி செய்தாலும் அது அல்லாஹ்வால் பொருந்திக்கொண்ட, அல்லாஹ்விற்கு மட்டும் பயந்த ஆட்சியாக இருக்கவேண்டும். கிழக்கு நிர்வாகம் மேற்கு நிர்வாகம் என்றுதான் இருக்கவேண்டுமே தவிர ஆட்சி அதிகாரம் ஒன்றுதான் இருக்கவேண்டும். அது பேரூராட்சி தலைவராக அமர்ந்து வழிநடத்தினாலும் சரி. ஊரில் பள்ளிவாசல்கள் அதிகரித்தாலும் அதற்க்கான வரவு செலவினங்களை மட்டுமே பார்க்கவேண்டும். (அதற்க்கு வழியில்லை என்றால் ஊரில் உள்ளவர்கள் இதனை விட்டுவிடுவார்களா?)
பணத்தை சேகரித்து மன்டபம் கட்டுகிறோம். பள்ளிக்கு வருமானம் தேடுகின்றோம் என்று கூறும் இவர்கள் இந்த ஜமாத்தில் உள்ள உறுப்பினர் என்ற முறையில் கேட்கிறேன், மதரசாவில் சட்டகல்லுரியை நிறுவலாம் என்று அரசு சலுகைகள் கொடுத்தபொழுதும் ஒரு இளநிலை ( Degree ) பாடத்திட்டத்தை கூட கொண்டுவராமல் மார்கத்தை மட்டும்  போதிக்கும் நீங்கள், உங்களால் ஒரு ஆரம்ப பள்ளி இஸ்லாமிய மற்றும் உலக கல்வி கொண்டுவரமுடிந்ததா? இதற்காக முயற்சி எடுத்திருந்தால்? அல்லாஹ் யார்மூலமாகவோ நமக்கு உதவி அளித்திருப்பான். இதை நம்மால் மறுக்க முடிமா?
நமதூர்  ( திருமாவளவன் ) கட்சிக்காரன் ஒருவன் கூறுகின்றான். இந்த ஊருக்காக நிறைய பணம் அரசிடமிருந்து வந்திருக்கிறது, அதை தலைவர் செய்யலாம் என்று பார்த்தால், இங்கு கிழக்கு மேற்கு என்று ஒற்றுமையில்லை. அதனால் அந்த பணிகள் கிடப்பில் இருக்கிறது என்று சப்பை கட்டுகின்றனர். இதுவரை இவன் ஊருக்கு எதயாவது செய்தானா? நம்மால் கேட்கமுடிந்ததா? ஒட்டு போட்டு யாமாந்ததுதான் மிச்சம் கட்சியில் இருப்பவனுக்கு 4 பாட்டில் போயிருக்கும் அவ்வளவுதான். 

இனிவரும் காலங்களில்....
  • இஸ்லாமிய பாடத்திட்டத்தோடு உலக கல்வியும் நமது பள்ளிவாசலில்ருந்து ஆரம்பம் செய்யவேண்டும்.
  • இஸ்லாமிய சிந்தனையோடு ஒருவன் +2 வரை படித்தான் என்றால் அவனை சைத்தான் அவ்வளவு லேசாக வழிகேடுத்துவிட முடியாது .
  • நாளைய தலைமுறை தனிமனிதன் ஒழுக்கம் கொண்டு இஸ்லாமிய சிந்தனையோடு உலகை மிகைத்தவனாக உருவாகும். ஏன் அதில் நம்ம்பில்லைகளும் இருக்கலாம்!
  • இது இல்லாமல் எத்தனை வட்டிஒழிப்பு மாநாடு  வரதட்சணை ஒழிப்பு மாநாடு நடத்தினாலும் அதில் நிச்சயம் வெற்றியுர்க்காது என்பதுதான் உண்மை.

இஸ்லாமிய கல்விகூடங்கலிருந்து  இஸ்லாம் கூறும் ஒற்றுமை என்னும் விதையை நம்பிள்ளைகளுக்கு நாம் விதைத்தால், எதிர்காலத்தில் ஒரு சமுதாயப்புரட்சி நமதூரில்ளிருந்து பிரகாசிக்கும். இந்த முயற்சி நமதூருக்கு ஓர் மைற்கல்லாக அமையும்.
நமது நிருபர். 

2 கருத்துகள்:

  1. அல்லாஹ் அக்பர்...அல்லாஹ் அக்பர்...

    அருமையான சாட்டை அடி . இனி வரும் காலங்களில் எங்களை யாரும் எமாற்ற முடியாது .

    உங்களுடைய இந்த பணி அருமையான ஓர் முன்னுதாரனம். எந்த ஒரு இயக்கம் சாராமல் நடு நிலையோடு செய்திகளை வெளியிடுகின்றீர்கள் . அது தான் இந்த தளத்தின் வெற்றிக்கும் , ஊரின் முன்னேற்றத்திக்கும் ஏதுவாக அமையும் என்று அல்லாஹ் விடம் பிராத்திப்போம்

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    சகோதரரின் சிந்தனைக்கும், முயற்சிக்கும் என்னுடைய பாராட்டுக்கள்!
    அல்லாஹ் தங்கள் மீதும் தங்கள் குடும்பத்தினர் மீதும் அருள் புரிவானாக! ஆமீன்!

    தங்களுடைய இயக்க வெறி அற்ற சமூக முன்னேற்ற சிந்தனை வரவேற்கத்தக்கது.

    சமூகத்தில் நடக்கும் குறைகளை சுட்டிக்காட்டுவது மட்டுமல்லாமல், அதற்கேற்ப தேவையான நல்ல செயல்பாடுகளை செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நம்மிடையே ஒற்றுமையும், மறுமைக்காக வாழக்கூடிய மனப்பக்குவத்தையும் தருவானாக! ஆமீன்!

    வஸ்ஸலாம்

    பதிலளிநீக்கு