Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

நமதூரில் வாகன சோதனை..

நமதூரில் வாகன சோதனை அதிகமாக நடைபெற்று வருகிறது. 

இதை நாம் பெருநாள் அன்றே கூறியிருந்தோம். தற்போது வாகன சோதனை காலையிலும் மாலையிலும் நடைபெற்று வருகிறது. இதில் நம்பர் போடு இல்லாத புதிய வாகனமாக இருந்தாலும் சுற்றுவதற்கு அனுமதில்லை. 
கடந்த இரண்டு நாட்களாக பள்ளி வாகனத்தையும் விட்டுவைக்கவில்லை காவல் துறையினர். அதிகமாக குழந்தைகளை ஏற்றிசெல்லும் வாகனத்தையும் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டாமல் இருக்கும் வாகனத்தையும் பிடித்து நடவடிக்கை எடுக்கின்றனர். இதில் ஆன்றோஸ் பள்ளி வாகனமும் சில அமினி வண்டிகளும் பிடித்தனர்.
காவல் துறையே .... நீத்தமாய் நடந்துக்கொள்ளுங்கள் !
இதில் ஆன்றோஸ் பள்ளி வாகனம் பிடிபட்டது போல் தனலட்சுமி வாகனத்திலும் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டாமல் இருந்தது. அதை ஏன் இவர்கள் பார்த்து உடனடியாக விட்டார்கள் என்றே புரியவில்லை! அவர்கள் பெரிய இடம் என்பதாலா ? அல்லது இவர்கள் வேலைக்கு பாதகம் ஏற்ப்படும் என்பதாலா? என்பது அவர்களுக்கே தெரியும். அவர்கள் நீதத்தோடு நடந்தார்கள் என்றால் அவர்களை நாம் பாராட்ட கடமை பட்டிருக்கிறோம்.
நமது நிருபர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக