Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

வபாத் செய்தி.


நமதூர் கிழக்கு, அரபாத் நகரைச் சேர்ந்த புதுக்குடி அப்துல் ரஜ்ஜாக் அவர்களின் இளைய மகனும், புதுக்குடி முஹைய்யத்தீன் பாஷா (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல அழைப்பாளர் மற்றும் லெப்பைக்குடிக்காடு பொறுப்பாளர்) அவர்களின் தம்பியுமான பாபு என்கிற இப்ராஹிம் பாஷா அவர்கள் இன்று (01/09/2012 சனிக்கிழமை) காலை 09:00 மணியளவில் துபையில்வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் உடல் நமதூருக்கு கொண்டுச்சென்று நமதூரில் நல்லடக்கம் செய்ய உள்ளது.

அன்னாரின் மஃபிரத்துக்காகவும், மறு உலகில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்ய வேண்டுகிறோம்...
செய்தி தொகுப்பு : TNTJLBK

3 கருத்துகள்:

  1. "இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்" யா "அல்லாஹ்" அண்ணார் அவர்கள் இம்மையில் செய்த சிறிய பெரிய பாவங்களை மன்னித்து, அவருடைய கப்ரை பிரகாசிக்கசெய்து, உன்னுடைய அழகிய சுவர்க்கபூங்காவில் நல்லடியார்களுடன் அமரச்செய்வாயாக, என்று துஆ செய்கின்றேன். அவர்பிரிவால் வாடும் அக்குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவர்களுக்கும், இறைவன் சாந்தியும், சமாதானமும், தந்தருள, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  2. I would like to thank you for the efforts you've put in penning this website. I'm hoping to view the same high-grade content from you later on as well.
    In fact, your creative writing abilities has inspired me
    to get my own, personal site now ;)

    Here is my website :: download free music

    பதிலளிநீக்கு
  3. Thank you for sharing your thoughts. I really appreciate your efforts and I am waiting for your next post thank you once again.



    Visit my blog post: free music
    My website > download songs

    பதிலளிநீக்கு