அமீரகத்தில் உள்ள இந்தியர்களுக்கு ஒரு ஓய்வுதிய திட்டம் இந்த மாத இறுதியில் இந்திய அரசு செயல் படுத்த உள்ளதாக துபாயில் வெளியாகும் தினசரி நாளிதழ் ஒன்றின் தேசிய ரிப்போர்ட் கூறியுள்ளது.
“மகாத்மா காந்தி பிரவாசி சுரகஷா யோஜனா” என்று அழைக்கப்படும். இத்திட்டம் இந்தியாவின் வெளிநாடு வாழ் மக்களுக்கான முதல் பாதுகாப்பு திட்டமாகும். இத்திட்டம் தொழிலாளர்களுக்கு உதவும் திட்டமாகவும் ஓய்வு ஊதிய திட்டமாகவும் அமையும். அமிரகத்தில் உள்ள ஒருமில்லியன் இந்தியர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும். அவர்கள் Emigration Cheque Required (ECR) பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் சேருபவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வருடத்திற்கு குறைந்தது ரூ 5000 செலுத்த வேண்டும். இதனில் இந்திய அரசு ரூ 1900 கூடுதலாக சேர்த்துக் கொள்ளும். இந்த ஓய்வுதிய திட்டத்திற்கான அலுவலகம் துபாயிலும் , அபுதாபியிலும் ஒவ்வொரு அலுவலகம் திறக்கப்படும்.
தகவல் அமீரகத்தில்யிருந்து நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக