Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

நம்பினால் நம்புங்கள்! நமதூரில் குறைதீர்க்கும் முகாம்.

 நமதூரில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.



நேற்று நமதூரில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் எதிர்கட்சி MLA S.S.சிவசங்கர் தலைமை வகுத்தார். இதில் நமதூரிளிருந்து இரு பெரும் ஜமாதார்களும், நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்.  
இதில் பல்வேறு தரப்பிலிருந்து மனுக்களும் இவரிடம் கொடுக்கப்பட்டது.



இதன் மூலம் பல்வேறு விசயங்களைப் பற்றியும் பேசப்பட்டது. குறிப்பாக பால்வாடி ஆசிரியரும்  மற்றும் சத்துணவு ஆசிரியரும் அதன் சுற்றயுள்ள 3 கிலோ மீட்டர்குள் தான் ஆள் எடுக்கவேண்டும், ஆனால் லப்பைகுடிகாட்டில் இருந்து ஒருவரை கூட ஏன் இதுவரை ஆள் எடுக்கவில்லை, ஏன் எங்கள் ஊரை மட்டும் புறக்கனிகிறீர்கள். இந்த ஊரில் அதற்க்கு தகுதியானவர்கள் யாரும் இல்லையா? என்றும் சாகுல் என்பவர் கேட்டார். மேலும் நமதூர் அரசு மருத்துவமனை பற்றியும் பேசப்பட்டது.
இதில் சில தீர்மானமும் போடப்பட்டது. அதில் நமதூர் ஆற்றின் கரையோரத்தில் தடுப்பு சுவர் கட்டுவதும், விளையாட்டு மைதானம் பற்றி தலைமை இடத்தில் பரிந்துரை செய்வது என்றும் தீர்மானமும் போடப்பட்டது. கடைசியாக வீடு இடித்தலை பற்றி பேசும்பொழுது திமுக ஆட்சி காலத்தில் இந்த வீடு இடித்தல் நம்மிடம் வரும்பொழுது, அதை நாம் முட்டுக்கட்டை போடும் விதமாக தடுத்து நிறுத்திவைக்கப்பட்டது. என்று MLA  பேசினார். இதிலிருந்து நமக்கு தெரிவது தர்க்களிகமாகதான் அவர்கள் இந்த விஷயத்தை அணுகினார்கள் போல தெரிகிறது. பாதாள சாக்கடை திட்டத்தையும் பற்றி கூறும் பொழுது தலைவர் கலைஞர் ஆட்சியில் போடப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் கிடப்பில் உள்ளது. இது அடுத்து நமது ஆட்சி வரும் பொழுது நிறைவேற்றி விடலாம் என்றும் கூறினார்.
ஆளில்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துற? என்பது போல தண்ணீர் வராத அத்துக்கு ஏன் இந்த தடுப்பு சுவர். தடுப்பு சுவர் கட்டுங்கள் நாங்கள் தடுக்க மாட்டோம். ஆனால் எங்கள் ஊருக்கு பாதகம் உண்டாக்கும் வீடுகள் இடித்தல் தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமாக நிறுத்துதலும், பாதாள சாக்கடை திட்டத்தையும் முதலில் கொண்டு வாருங்கள். இதற்க்கு எதிராகவோ ! அல்லது உங்கள் அரசியல் கட்சிக்கு ஆதரவாகவோ! பேசுவது எங்களுக்கு செவுடன் காதில் சங்கு ஊதுவதற்கு சமம்தான்.
சகோதரர்களே! இப்படிப்பட்ட விஷயங்கள் இன்றல்ல, காலம் காலமாக நம்மை ஏமாற்றும் வித்தைதான் இதில் நாம் நம் அதிகாரத்தை கொண்டுவராத வரை நம்மை ஓட்டு இயந்திரமாகத்தான் இவர்கள் பயன் படுத்துவார்கள். இது ஒரு பாட்டாளி மக்கள் கட்சியாகட்டும், தேவர்கள் கட்சியாகட்டும், ஏன் இதர பல கட்சியாகட்டும், அவர்கள் இடத்தில் இப்படிப்பட்ட சம்மபவம் நிகழுமேயானால் அவர்கள் தலைமையை அலைகழித்து விடுவார்கள் ஏதோ ஒரு ரூபத்தில் அவர்கள் கோரிக்கை நிறைவேறிவிடும். ஏன் நமக்கு மட்டும் அப்படி நிகலாததுக்கு காரணம்? அதிகார வர்கத்தில் நம்மிடம் இருந்து ஆட்கள் இருக்கும் பொழுதுதான், நாம் நம் தேவைகளை தீர்த்துக்கொள்ள முடியும். இதுதான் எழுதப்படாத இஸ்லாமியர்களின் விதி என்பதை புரிந்துக்கொள்வோம்.
நமது நிருபர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக