Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 20 செப்டம்பர், 2012

தாருஸ்ஸலாம்- மிடமிருந்து மழைதொழுகைக்கு விளக்கம்..

பிஸ்மில்லாஹ்..
http://labbaikudikadunews.blogspot.inநீங்கள் வெளிபடுத்தும் ஐயப்பட்டுக்கு, தாருஸ்ஸலாம் விளக்கமளிக்க வேண்டியிருந்தீர்கள்.
1-மழை (வேண்டி) தொழுகையின் போது நபி (ஸல்) அவர்கள் தனது மேலாடையை புறட்டிப்போட்டுக்கொண்டு 2 ரகாஅத் பெருநாள் தொழுகையைப்போல் தொழுதார்கள். அதை கருத்தில் கொண்டு நபிவழி பேனும் நமது சகோதரர்கள் மழை (வேண்டி) தொழுகையை தொழ செய்தார்கள். 2-அப்படிபட்ட தொழுகையை திடலில் நடத்தினார்கள். 3-ஆண்களுடன், பெண்களும் கலந்து கொண்டார்கள்.
திடல் தொழுகையாகட்டும், பள்ளி தொழுகையாகட்டும், இதில் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் திரை இடச்சொல்லி உபதேசித்து யாதொரு ஹதீஸும் இடம் பெறவில்லை. பெண்கள் பின் வரிசையில் இடம் பிடித்து தொழுத்தாக சொல்லப்ப்பட்டுள்ளது. இதை பார்கையில், தாருஸ்ஸலாம் சகொதரர்கள் செய்தது குற்றமாக காணமுடியாது. இன்னும் மேலாடை மாற்றும் போது, மறப்பு அவசியம் என்று கருதமுடியாது. பெருநாள் அன்று திரை அமைத்ததை வசதியான ஒன்றாக கருதவேண்டும். அப்படிப்பட்ட வசதியை  தாருஸ்ஸலாம் நிர்வாகம் இனிவரும் நாளில் தவறமல் செய்யும். இன்னும், உங்கள் ஐயம் நீங்கிக்கொள்ள ஹஜ் நாளில் இஹ்ராம் ஆடையுடன் இருக்கும் ஆண்களின் தோற்றத்தை பாருங்கள். பார்வைகளை விசாலமாக்குங்கள்.  அல்லாவே நமக்கும், அனைத்துக்கும் போதுமானவன்.
---agmbaasha 9655411997.

1 கருத்து:

  1. asalamu alaikum

    allah says ladies should cover their beauty
    without seeing face anybody marry a girl
    because beauty is max depend on her face
    those who obey to allah , let put the curtain in between men and women

    பதிலளிநீக்கு