Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

முகமூடிக்குள்ளே இருக்கும் உங்களுடைய உண்மையான முகத்தை எப்பொழுதாவது பார்த்ததுண்டா? – மோடிக்கு சஞ்சீவ் பட் திறந்த கடிதம்!


Sanjeev Bhatt writes open letter to Narendra Modi
அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து அம்மாநில முன்னாள் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ்பட் திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலையில் 32 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, மோடிக்கு எதிராக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ததால் பழிவாங்கப்பட்ட சஞ்சீவ் பட் அவரை விமர்சித்து கடிதம் எழுதியுள்ளார்.
“தங்களுக்கு வலதுகரமாக செயல்பட்ட மாயா கோட்னானி,  பாபு பஜ்ரங்கி,  தவறாக கருத்தரித்த ஹிந்துத்துவா கொள்கையால் தவறாக வழிநடத்தப்பட்ட உங்களது ஹிந்துத்துவா காலாட் படையினர் ஆகியோருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது  உங்களுக்கு தெரியுமா?” என்று சஞ்சீவ் பட் கேள்வி எழுப்புகிறார்.

“தீர்ப்பு வெளியான தினத்தில் எல்லாவற்றில் இருந்து ஒதுங்கியிருக்கத்தான் சமர்த்தாக நீங்கள் கூகிள் ஃப்ளஸின் ஹேங் அவுட் சாட்டில் மும்முரமாக ஈடுபட்டீர்களோ? நீங்கள் அனைவரும் சிறையில் தள்ளியவர்களின் குடும்பத்தினரைக் குறித்து ஒரு நிமிடம் யோசித்தீர்களா? நீங்கள் ஒரு காலத்தில் திருமணம் புரிந்தீர்கள் என கருதப்படுகிறது. மற்ற அனைவரையும் போல வாழ்க்கையில் அன்பைக் குறித்தும், குடும்பத்தை உருவாக்குவது குறித்தும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால், இப்பொழுது உங்களுக்காக ஆயுள் முழுவதும் முகஸ்துதி பாடியவர்களின் குடும்பத்தினரின் நிலைமையை கண்டீர்களா? முகமூடிக்குள்ளே இருக்கும் உங்களின் உண்மையான முகத்தை எப்பொழுதாவது பார்த்ததுண்டா? தாங்களின் ஊடக மேலாளர்கள் வேண்டுமென்ற மிக கவனத்துடன் உருவாக்கிய பிம்பத்தின் பின்னால் உள்ள உங்களது உண்மையான முகத்தை நீங்கள் பரிசோதித்ததுண்டா? இதர மனிதர்களை பலிகொடுத்து அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதை சரி என நீங்கள் கருதுகின்றீர்களா? ஒரு மனிதன் தங்களின் மத நம்பிக்கையை பின்பற்றவில்லை என்ற காரணத்தால் அவனை கொலைச் செய்ய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது சரியா? ” என்று சஞ்சீவ் பட் 2002 முஸ்லிம் இனப்படுகொலை குறித்து கேள்வி எழுப்புகிறார்.
“தங்களின் அரசியல் நோக்கத்தை பூர்த்திச் செய்வதற்கான சிறிய விஷயமாகவா இதனை கருதுகின்றீர்கள்?
நேர்மை என்பது உங்களின் வாழ்க்கையில் எப்பொழுதேனும் இருந்திருந்தால்,  நான் கேட்ட இக்கேள்விகளில் ஏதேனும் ஒரு சிலவற்றிற்கு மட்டுமாவது பதில் அளியுங்கள்!” – இவ்வாறு சஞ்சீவ் பட் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக