Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 20 செப்டம்பர், 2012

உலக வாழ்க்கைக்கு முக்கியதுவம் கொடுக்கும் நமதூர் முஸ்லீம் வாசிகள்...


உலக வாழ்க்கைக்கு முக்கியதுவம் கொடுக்கும் நமதூர் முஸ்லீம் வாசிகள்...

கடந்த 18.09.2012 அன்று இரவு நமதூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆர்கெச்டா நடந்தது. இதில் திரளாக மக்கள் கலந்து கொண்டனர். நாம் இவர்கள் செய்யும் வழிமுறையை எப்போதும் குறைசெல்லுவதும் இல்லை . அப்படி குறை செல்ல எங்களுக்கு இஸ்லாம் கற்றுதரவும் இல்லை.

அல்லாஹ் தன்திருமறையில் கூறுகின்றான்:


(நபியே ! நிராகரிக்கும் மக்காவாசிகளை நோக்கி ) நீங்கள் கூறுங்கள் . நிராகரிப்பவர்களே ! .

நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்க மாட்டேன்.

நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை.

(அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்குபவன் அல்லன்.

நாள் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர்.

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம் , எனக்கு என்னுடைய மார்க்கம்.

அல் குர்ஆன் 109 : 1-6

இதில் 4லில் 3பங்கு நமதூர் வாசிகள் கலந்து கொண்டனர். தன்னுடைய பிள்ளைகளையும் அழைத்து வந்து இதில் பங்கு பெற்றனர். நம்முடைய மன கவலை என்ன வெனில் என்றாவது இவர்கள் வெள்ளி கிழமை ஜீம்மா தொழுகைக்கு இமாம் மிம்பர் படி ஏறும் முன் பள்ளிவாசல் வந்து 
உண்டா ? ( ஜீம்மாவுக்கு முதலில் வருபவர்களுக்கு ஒட்டகம் குர்பானி கொடுத்த நன்மையும் , இரண்டாவது வருபவர்களுக்கு மாடு குர்பானி கொடுத்த நன்மையும் , அடுத்தது மூன்று , நான்காவது வருபர்களுக்கு ஆடு , கோழி குர்பானி கொடுத்த நன்மையும் கிடைப்பதாக அல்லாஹ்வின் 
தூதர் கூறுகின்றார்கள்.)  தன்னுடைய பிள்ளைகளை என்றாவது தொழுகை போகும் போது அழைத்து சென்றது உண்டா ? ஏனெனில் இவர்களிடத்திலும் தொழுகையும் கிடையாது .இவர்கள் சார்ந்து இருக்கும் ஜமாத் (நிர்வாகிகள் ) மற்றும் இமாம்களுக்கு எந்த ஒரு சிந்தனையும் கிடையாது. தன்னுடைய வயிறு நிரம்பினால் போதும் என்று தான் இவர்கள் இருக்கிறார்கள்.

சமூக சிந்தனை இல்லாமலும் , தன் பொறுப்பை பற்றி கவலை இல்லாமலும் அற்ப உலக ஆசையில் மூல்கி கிடைக்கும் இவர்களை போன்றவர்களுக்காக அல்லாஹ்வின் எச்சரிக்கை !

(இறைவன் மறுமையில் மனிதர்களையும் ஜின்களையும் நோக்கி) “மனித , ஜின் கூட்டத்தார்களே ! உங்களில் தோன்றிய (நம்முடைய) தூதர்கள் உங்களிடம் வந்து நம்முடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பித்து நீங்கள் நம்மைச் சந்திக்கும் இந்நாளைப் பற்றியும் உங்களுக்கு இச்சமூட்டி
எச்சரிக்கை செய்யவில்லையா?” என்(று கேட்)பான் . அதற்கவர்கள் “(எங்கள் இறைவனே! உண்மைதான்) இவ்வுலக வாழ்க்கை எங்களை மயக்கி விட்டது” என்று தங்களுக்கு எதிராக சாட்சியம் கூறுவதுடன் , நிச்சயமாக தாங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததாகவும் தங்களுக்குத் தாமே எதிராக அவர்கள் 
சாட்சியம் கூறுவார்கள்.

அல் குர்ஆன் 6 : 130

இனியாவது மறுமைக்கு பயன் தரும் செயல்களுக்கு முக்கியத்துவம் தருவார்களா ?

                                                                                                                                                                                    நமது நிருபர்

1 கருத்து:

  1. அஸ்லாமு அலலைகும்
    அருமையான கட்டுரை உங்கள் கவலையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி
    நாமும் இதை போன்ற சம்பவத்தை நடை பெறாமல் பாத்து கொள்வோம்

    இருந்த போதிலும் நமது ஊருரின் அனைத்து ஜமாஅத்தர்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு