படித்த பள்ளிக்கூடமும்
அன்பாய் இருந்த தமிழ் ஆசிரியரும்
விளையாடிய மைதானமும்
அமர்ந்து பேசிய திண்ணையும்
சுற்றி திரிந்த இடங்களும்
கண்ணுக்குள் நிழலாடுகிறது...
மனைவியின் சினுங்கலும்
பிள்ளையின் கொஞ்சலும்
நண்பர்களின் அரட்டையும்
சகோதரனின் திருமணமும்
இதயத்தில் இனிக்கிறது...
நினைவலைகள் நெஞ்சத்தின்
கரைகளை உடைத்துக் கொண்டிருக்கிறது...
இந்த அடுக்குமாடி குடியிருப்பின்
நான்கு சுவர்களுக்கிடையில்...
முதல் முறை வேலைக்காக
ஊரையும் உறவுகளையும்
பிரிந்து வெளிநாடு செல்கையில்
யாருக்கும் தெரியாமல்
கதறி அழுத மிச்சக்கண்ணீர்
இன்னும் கைகளில் ஒட்டிக்கொண்டிருக்கிறது...
ஒவ்வொரு முறையும் முடித்து விட்டு
சென்று விட வேண்டும் என்று
பேராவல் தான் நமக்கு...
ஆனால் இந்த நாடோடி
வாழ்க்கை...
நம் காலை கட்டி போட்டிருக்கும்
பாம்புகளாகவே இருக்கிறது...
பயத்தினால் உதறிவிட முடியாமல்
நாளும் அதை ஊட்டி வளர்க்கிறோம்...
அதையும் மீறி..
தந்தையின் தோளுக்கு துணையாகவும்
சகோதரியின் திருமணமும்..என
கடமைக்காக கண்டங்கள்
தாண்டுவதில்...
பறவைகளைப்போல் நாங்களும்
சளைத்தவர்கள் அல்ல...
மின் அஞ்சல் மூலமாக
துள்ளி வா சங்கம்
துபை கிளை ( லெப்பைக்குடிக்காடு )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக