செப் 22 : திருச்சி மேலசிந்தாமணி அருகில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் சார்பாக நபி (ஸல் ) அவர்களை இழிவுபடுத்தும் படத்தை வெளியிட்டதற்கு அமெரிக்காவிற்கு கண்டனம் தெரிவித்து சரியாக சுமார் 3 மணிக்கு கண்டன கோசத்துடன் துவங்கியது .மாவட்ட ஜமாத்துல் உலமா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து இயக்கங்களின் தலைவர் களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர் .இதில்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக திருச்சி மாவட்ட செயலாளர் I சபியுல்லாஹ் மற்றும் SDPI இன் மாவட்ட துணை தலைவர் சம்சுதீன் அவர்கள் கண்டன உரையாற்றினர் . .
இதில் எந்த விதமான பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக முடிந்தது .கூட்டத்தில் சுமார் 5000 மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக