Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

வீடியோவை நீக்க முடியாது , ஹிலாரி கிளின்டன் !



வீடியோவை நீக்க முடியாது, தனிப்பட்ட நபரின் கருத்துரிமையை பரிப்பது அமெரிக்க சட்டத்திற்கு எதிரானது! – ஹிலாரி கிளின்டன்!
செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, September 14, 2012, 10:15
செய்திகள் >> முக்கியச் செய்திகள்
நேற்று (13-9-2012) வாஷிங்டன்னில் U.S.-Morocco உரையாடல் நிகழ்ச்சியில் ஹிலாரி கிளின்டன் 16 நிமிடங்கள் பேசியுள்ளார்.

நபிகள் நாயகத்தை மிகவும் கொச்சைப்படுத்தி வெளியான திரைப்படத்தினால் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் கொந்தளித்துபோயிருக்கும் நிலையில் அவர்களை மேலும் கொதிப்படைச் செய்யும் விதமாகவும், அமெரிக்க அரசு எந்த அளவிற்கு முஸ்லிம் விரோத போக்கை மேற் கொள்கின்றது என்தை உணர்த்தும் விதமாகவும் தனது உரையில் ஹிலாரி பேசியுள்ளார்.

அவர் தனது பேச்சில்,

நாடு முழுவதும் முஸ்லிம்களின் போராட்டத்திற்கு காரணமான வீடியோவை அமெரிக்க அரசு செய்ய ஒன்றும் முடியாது. தொழில் நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் அதை நீக்குவது சாத்தியமல்ல. அப்படியே சாத்தியம் என்றாலும் தனிப்பட்ட நபரின் கருத்துரிமையை பரிப்பது நாட்டின் சட்டத்திற்கு எதிரானது. தனிப்பட்ட நபர் தனது கருத்தை வெளிப்படுத்துவதை தடுக்க முடியாது.

நான் இவ்வாறு கூறியதை சிலரால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றாலும் வேறு வழியில்லை.

எனது தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கூறிய ஹிலாரி, பேச்சின் ஆரம்பத்தில், அதே நேரத்தில் தனிப்பட்ட முறையில் அந்த வீடியோவை நான் பார்த்தில் ”வீடியோ வெறுக்க தக்கதாகவும் கண்டிக்கதக்கதாகவும்” உள்ளது எனக் கூறியுள்ளார்.

வேறு மதத்தில் இருக்கும் நம்மாலே இந்த வீடியோவை ஜீரணிக்க முடியவில்லையே வெருப்பு வருகின்றதே கண்டிக்க வேண்டும் என்று கோபம் ஏற்படுகின்றதே, முஹம்மு நபியை உயிரினும் மேலாக மதிக்கும் இதை பார்த்த முஸ்லிம்கள் எப்படி சும்மா இருப்பார்கள்? என்ற அடிப்படை அறிவு வேண்டாம் இந்த அமெரிக்க பிரதிநிதி கிளிண்டனக்கு.

தனிப்பட்ட முறையில் கண்டிப்பார்களாம் ஆனால் அரசாங்கம் ரீதியாக அந்த வீடியோவை பேச்சுரிமை, கருத்துரிமை என்பார்களாம்.

ஆங்கில செய்தி ஊடங்கள் ஹலாரியின் பேச்சில் ”வீடியோ கண்டிக்கதக்கது” எனக் கூறியதை தான் வெளியிடுகின்றது.

”கண்டிக்கதக்க வீடியோ” வை நீக்க முடியாது எனக் ஹிலாரி கூறியதை மறைத்து செய்தி வெளியிடுகின்றனர்.

வீடியோவையே ஒன்னும் செய்ய முடியாது எனக் அமெரிக்க அரசு கூறியதிலிருந்து நபிககள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் படத்தை தயாரித்தவனை ஒன்னும் செய்யப் பொவதில்லை என்பது இதிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.

இதில் ஒரு வேடிக்கையான விசயம் என்னவெனில் ”அந்த கிரகத்திற்கு சென்று விட்டோம் இந்த கிரகத்திற்கு சென்று விட்டோம், ஆளில்லாத விண்கலத்தை வெற்றிகரமாக இரக்கிவிட்டோம்” என பில்டப் விடும் அமெரிக்க வல்லரசு ஒரு வீடியோவை நீக்குவது சாத்தியமல்ல எனக் கூறியுள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் படம் வெளியாவதற்கு முன்பே இணையதளத்தில் அந்த ஒரு தமிழ் படம் வெளியிடப்பட்டது. உடனே அப்போதைய முதல் கலைஞர் அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டு இந்த வீடியோ இணையதளத்திலிருந்து முற்றிலுமாக உடனடியாக நீக்கப்பட்டது.

வயதான கலைஞரால் முடிந்தது வல்லரசானா அமெரிக்காவால் முடியாதாம். கேக்குறவன் கேனயன்னா கேப்பையில நெய் வடியிதுன்னு சொல்வாங்கலாம்.

ஹிலாரி பேசிய வீடியோ:



ஹிலாரி பேசியுள்ள முழு உரையின் script வடிவம்:


யமனில் நேற்று போராட்டம் வெடித்துள்ளது. அங்குள்ள அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.

படம் எடுத்தவன்






இதன் பிரதிபளிப்பு நம் தமிழகத்திளும் பிரதிபளித்தது.





நோற்று 13.09.2012 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் சென்னை அமெரிக்கா தூதரக முற்றுகை.





இன்று 14.09.2012 த.மு.மு.க மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாத் 





நாளை 15.09.2012 இன்ஷா அல்லாஹ் த.த.ஜா அமெரிக்க தூதரக முற்றுகை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக