Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 19 செப்டம்பர், 2012

மடியும் மழலையர்:மரத்துப் போனதா நம் உணர்வுகள்?


எனது வீட்டில் பல போட்டோ ஆல்பங்கள் உள்ளன. அவற்றின் அருகில் கூட நான் செல்வது இல்லை. எனது ஈராக் பயணத்தின் பொழுது எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்களை காணும்பொழுது உள்ளம் குமுறும் என்று அஞ்சி ஒரு மூலையில் விட்டு வைத்திருக்கின்றேன். இரண்டு சகாப்தங்களாக அமெரிக்கா ஈராக்கில் நடத்தி வரும் தாக்குதல்களில் உபயோகப்படுத்திய டெப்ளீடட் யுரேனியத் (DU) தின் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு ஒரு அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்தாம் அப்புகைப்படங்களில் உள்ளனர்.

பாக்தாத்தில் உள்ள அல் குஸ்தன்சிரியா பல்கலைகழகத்தினுடன் ஒட்டியுள்ள மருத்துவமனைக்கு சென்றது எனது இதயத்தில் இருந்து இறங்காது. அம்மருத்தவமனையின் வளாகத்தை மருந்தின் வாசனை நிரப்பியிருக்கவில்லை மாறாக ‘இறப்பின் வாசனை’ தான் எங்கும் சூழ்ந்திருந்தது. அமெரிக்க தாக்குதலின் பொழுது அம்மருத்துவமனையில் மிகவும் அடிப்படைத் தேவைகளான மருந்துகளும் மயக்கத்திற்கான உபகரணங்களும் கூட அங்கிருக்கவில்லை. குழந்தைகள், வரும் பார்வையாளர்களை வெறுமனே உட்கார்ந்து பார்த்துக்கொண்டு இருந்தனர். இன்னும் நிறைய குழந்தைகள் தாங்க இயலாத வலியினால் அழுது கொண்டு இருந்தனர். அவர்களின் பெற்றோர்களோ நம்பிக்கைக்கும் இறை தியானங்களுக்கும் மத்தியில் ஒரு நாள் நமது குழந்தைகள் காப்பாற்றப்படலாம் என்று இருந்தனர்.
ஒரு இளைய வயது மருத்துவர் கூறினார், “இங்கு வரும் எந்தக் குழந்தைகளும் உயிருடன் திரும்பியதில்லை,” என்றதும் எனது உள்ளம் பதறியது.  (எனது கண்கள் இப்பொழுது குளமாகின்றன-மொழிப்பெயர்ப்பாளர்) அப்பொழுது இளைய வயதான பத்திரிக்கையாளராக எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் மருத்துவர் கூறுவதை அப்படியே குறிப்பெடுத்துக்கொண்டு இருந்தேன். இறப்பு பற்றிய ஒரு சிந்தனையின்றி இருந்தேன். பலவருடங்கள் கழிந்தும் அந்த கொடூரங்கள் இன்னும் ஈராக்கில் தொடர்கிறது.
ஆகஸ்டு மாதம் 16-ம் தேதி 1990 வருடம், அமெரிக்காவின் தாக்குதலில்  நிறைய ஈராக்கியர்கள் தாக்குதல்களில் இறந்தனர், பலபேர் படுகாயம் அடைந்தனர். ஊடங்களே 200 பேர் அந்த மாதத்தில் மட்டும் இறந்ததாக  தகவல்கள் அளிக்கின்றன. ஆனால் அதனைத் தொடர்ந்து எந்த ஒரு விளக்கங்களும் கொடுக்கப்படவில்லை. ஈராக்கில் வாழும் மக்கள் இப்படி இறக்கத்தான் வேண்டும், அதுதான் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவிதி என்று ஏற்றுக்கொள்கிறோமா?
ஆனால், அம்மக்கள் இறப்பதற்கு முன்பு அவர்களுக்கு என்று ஒரு முகவரி இருந்தது. குடும்பங்கள் இருந்தது. அவர்களுக்கு என்று ஒரு முகம் இருந்தது. அவர்களுக்கு என்று வாழ்க்கை இருந்தது.  அவர்களுக்கு என்று மானமும் மரியாதையும், அவர்களது சமூகத்தில் அந்தஸ்தும் இருந்தது. அவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகள்; அவர்களுக்கு ஈராக்கின் அரசியல் நிலைமைகள் குறித்து ஒன்றும் அறியார். அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு பற்றியோ அதனைத் தொடர்ந்து நடந்துவரும் பிரிவினை சண்டைகள் பற்றியோ அக்குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது.
ஆனால் அடிக்கடி இதனை மறந்து விடுகிறோம். அரசியல் தீவிரவாதத்திற்கு ஆளாக, ஆட்கொள்ளப்படாதவராக இருந்தாலும்,  அங்கு நடைபெற்றுவரும் வன்முறைகளை ஏற்றுக்கொண்டவர்களாக ஆகிவிடுகின்றோம். ஈராக்கின் கொடூரங்களோடு வாழ்ந்து வருகின்றோம். எந்த அளவுக்கு எனில் ஈராக்கில் அன்றாடம் நடைபெற்று வரும் வெடிகுண்டு தாக்குதல்களில் தப்பிக்கும் நபர்களை காப்பாற்ற எந்த வழியும் இல்லை என்று எண்ணுகிறோம். எப்படியோ அங்கு இருக்கும் அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்க இயலாது என்றும் பட்டினி கிடப்பவர்களுக்கு உணவளிக்க இயலாது என்றும் நம்மை நாமே மாற்றிக் கொண்டுவிட்டோம்.
இம்மாதிரியான விளைவுகள்  சூடானிலும் உள்ளது. சூடானில் வடக்கு நைல் மகாணங்களில் நிலவும் வறட்சியின் கோரத்தால் மக்கள் தொடந்து ‘படில்’ லில் உள்ள கேம்ப்களுக்கு கால்நடைப் பயணமாக வெளியேறுகின்றனர்.  நிறைய பேர் பல வாரங்கள் கால்நடைப் பயணத்திற்க்குப் பின் ‘உயிர் பிழைப்பை’ எண்ணி வந்து சேருகின்றனர்.  நிறையபேர் வரும் வழியில் மாண்டு விடுகின்றனர். ஆகஸ்டு மாதம் 17-ம் தேதி பி.பி.சி. செய்தி அறிக்கையின்படி,  “எல்லைகளைத் தாண்டிய மருத்துவர்களின் எச்சரிகைகள் வழியாக கூறுவதாவது: தெற்கு சூடானில் மருந்துகள் இல்லாமல் நிறையப் பேர் மரணித்து விடுகின்றனர்” என்பதாகும்.
எல்லைகளைத் தாண்டிய ஒருங்கிணைப்பாளர் ஹெலன் பீட்டர்சன் கூறுவதைக் கேட்ட என் உள்ளம் ஸ்தம்பித்துப் போனது. தர்ஃபூரின் நிலைமைதான் அது. வெளியேறிய ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் அகதிகளில் ஒரு இலட்சம் அகதிகள் ‘படில்’லில் உள்ளனர். அதில் இருக்கும் குழந்தைகளில் 28% சதவிதத்தினர் ஊட்டச்சத்து குறைந்து இறக்கும் வீதம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட இரு மடங்கு அதிகமாக உள்ளது.
தர்ஃபுர், தொடர்ந்து வரும் புண் காயமாகும். அங்கு இருக்கும் அகதிகள் தொடர்ந்து ஒரு இடம் விட்டு மறு இடம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றனர்.  ‘கஸ்ஸாய்’ என்ற இடத்தில் உள்ள 25000 அகதிகள் இம்மாதம் அந்த அகதி முகாமை விட்டு அஞ்சி “குடும்” என்ற இடத்திற்கு சென்றனர். இந்த புதிய முகாமில் உணவும் தண்ணீரும் மிகவும் தட்டுப்பாட்டில் உள்ளது (சி.என்.என் ஆகஸ்டு 9, 2012)
அதற்குப் பிறகு இந்தச் செய்திகள் ஊடகங்களில் புறந்தள்ளப்பட்டது. காரணம் அம்மக்களுக்கு, 25000 அகதிகளுக்கு நல்ல உணவும் நீரும் கிடைத்தது என்பதல்ல. மாறாக அரசியல்வாதிகளின் இரட்டை முகங்கள் பற்றிய செய்திகளுக்கும் நடிகர் நடிகைகள் (இங்கிலாந்து இளவரசர் நிர்வாணமாக கடற்கரையை உலாவந்தது உலகளாவிய விசயமாக மாறியது).  படில் அன்று கஸ்ஸாவில் அகதி முகாமில் அகதிகள் குறிப்பிட்ட எண்ணிகையில் இறந்த பிறகு ஏதாவது ஒரு ஹாலிவுட் சமாதானவாதிகளின் அறிக்கைக்குப் பிறகு அல்லது வருகைக்குப் பிறகு ஊடகங்களின் முதல் பக்கத்திற்க்கு இந்த செய்திகள் வருவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம்.
“விளம்பரத்திற்காக விரும்பும்” வி.ஐ.பி.க்கள் மிக அருகாமையில் பாலிக்கு செல்வது போல் தெரியவில்லை. மேற்கு ஆஃப்ரிக்காவினர் நிலைமை மிகவும் படுமோசமான நிலைக்குச் சென்று கொண்டு இருக்கும் பொழுது, ஊடகங்களோ, அங்கு நடக்கும் பிரச்சினைகளுக்கு தீவிரவாதிகளும், போராளிகளும், சண்டைக் குழுக்களே காரணம் என்று பரப்புரை செய்யப்படுகின்றது.
நான்கு இலட்சத்து முப்பத்தைந்தாயிரம் (4,35,000) அகதிகள் அண்டை நாடுகளுக்கு வெளியேறி இருக்கின்றனர். இது ஐ.நா. வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையாகும் (ஆகஸ்டு 16, 2012). ஆனால் எல்லா ஊடகங்களும் இத்தகவலை மறைத்து மறந்துவிட்டனர்.
அகதிகள் மட்டும் அல்ல, நாட்டில் வாழும் மற்ற பல இலட்சக்கணக்கான மக்களுக்கு கிடைக்கும் உணவுப் பற்றாக்குறை மிகவும் மோசமான சூழலை எத்தியுள்ளது. மாலிக் குழந்தைகள் இதில் மற்ற நாட்டு குழந்தைகளைவிட உணவுப் பற்றாக் குறையில் விஞ்சியுள்ளனர். அக்குழந்தைகள் எந்த உதவியும் இன்றி நடுக்காட்டில் அல்லது எல்லையற்ற நடு பாலைவனத்தில் விடப்பட்டவர்கள் போன்றுள்ளனர். அவர்கள் இறந்த பிறகு, இறந்தவர்களின் பட்டியலில், இறந்தவர்களின் எண்ணிக்கையில் கணக்கிடப்பட்டவர்களாக, எந்த ஒரு மதிப்புமற்றவர்களாக இடம்பெறும்.
இருப்பினும் இந்த நிகழ்வின் மூலம் கிடைக்கும் படிப்பினை. ஒவ்வொரு மாலியினரும், சூடானியரும், ஈராக்கியரும், சிரியரும், பாலஸ்தீனியரும், எமன் நாட்டவரும், அல்லது ரோஹிங்கியா குழந்தை இறக்கும் பொழுது அவர்களை சுற்றியுள்ளவர்களுக்குதான் மிகவும் வருத்தம் உண்டாகும். அவனுடைய வாழ்வு அல்லது மரணம் அரசியல் இராஜதந்திரங்களுக்கு உதவலாம். அப்புவியியல் பற்றிய செய்திகளுக்கு வலுவூட்டலாம் அல்லது “பேஸ்புக்” பக்கங்களில் ஆயிரக்கான “லைக்” களும் “ஷேர்” களும் கிடைக்கும். ஆனால் இறக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு, குடும்பத்தினர்களுக்கு, நண்பர்களுக்கு அண்டைவீட்டினருக்கு அக்குழந்தைகள்தாம் இவ்வுலகிலேயே முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.  எனவே யு.என்.ஆர்.டபிள்யு.எ அல்லது யுனிசெஃப், பணப் பற்றாக்குறைப் பற்றி குறை கூறினால், அதன் உண்மையாதெனில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான குழந்தைகளின் உயிர் ஊசலாடுகின்றது என்பதுதான் எதார்த்தமாகும்.  இதனால் நிறையபேர் தங்களுக்கு இருக்கின்ற நம்பிக்கை உடைந்து போய் பெருஞ்சோகத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.
இதுபோன்ற பெரும் கொடூரங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் பொழுது ‘அரசியல் சித்தாந்தங்களையோ அல்லது இப்பெரும் கொடூரங்களுக்கு அங்கு நடைபெற்று வரும் வன்முறைகளை காரணமாகக் கூறிக்கொண்டு நாம் வாழது இருந்து விடலாம். ஆனால் தொடர்ந்து நடந்து வரும் வன்முறைகளால் மனித உயிர் முக்கியத்துவம் அற்றதாகவோ அல்லது குழந்தைகள் அப்பாவியற்றவர்களாகவோ மாறிவிடமாட்டா!  ஈராக்கியர்கள் தங்களது உறவினர்களை புதைப்பதும் சூடானியர்கள் தங்கள் உயிரை பாதுகாப்பதற்காக தொடர்ந்து ஓடுவதும் தினந்தோறும் நடக்கும் கொடூரமாக மாறிவருகின்றது. இருப்பினும் தினந்தினம் நடக்கும் இதுபோன்ற கொடூரங்களைக் கண்டு கண்டு ஒரு கை நீருக்காக பச்சிளங்குழந்தை “சஹாரா பாலைவனத்தினை தாண்டுவது” விதியாக கருதி விட்டோம்!
ரம்ஸி பரூத், ஃபலஸ்தீன் குரோனிக்கிளின் ஆசிரியர்
(தமிழில் ராம்ஜி பரூதின் அனுமதியுடன் இஸ்மாயில், ஷார்ஜா)
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக