Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 10 செப்டம்பர், 2012

நமதூரில் ஆட்டுக்கறி வாங்குபவர்கள் கவனத்திற்கு...


நமதூரில் செத்த ஆடுகளை அறுக்கின்றனர் என்று புதிதாக நமக்கு  கிடைத்துள்ள  செய்தி நம்மிடையே ஆச்சரியத்திற்கு உண்டாகியது.
( நம்பிக்கையாளர்களே! ) தாமாக செத்தது , இரத்தம் , பன்றியின் மாமிசம் , அல்லாஹ் அல்லாத (வேறு) பெயர் கூறப்பட்டவைகள் ஆகியவற்றைத்தான் உங்களுக்குத் தடை செய்துள்ளான். ஆதலால் எவரேனும் வரம்பு மீறாமலும், பாவம் செய்யும் நோக்கமில்லாமலும் இருந்து (இவற்றைப் புசிக்க) நிர்ப்பந்திக்கப்பட்டு விட்டால் (அது) அவர் மீது குற்றமாகாது. நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையவானாகவும் இருக்கின்றான்  அல் குர்ஆன் 2 :173
இதை நாம் நேரில் பார்க்கவில்லை அனால் இது உண்மை என்று தான் தெரிய வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இவர்கள் நோய்வாய் பட்ட, படும் சீக்கு கொண்ட, நிற்க கூட வலிமையில்லாத ஆடுகளை அறுப்பதாக செய்திகள் வெளிவந்தது. தற்போது சாக்கு பையில் செத்த ஆட்டை
கொண்டுவந்து விடியற்காலையிலே அறுத்ததாக செய்திகள் கூறப்படுகிறது. நம்மிடம் ஆதாரம் இல்லை ஆனால் செய்திகள் நம்ப தகுந்த ஆள்மூலம் கிடைத்தது. ஆதாரம் இல்லாதமையால், இதை இப்படியே விட்டுவிட முடியாது.அவர்கள் பெயரையும் குறிப்பிட முடியாது.
 உண்மையோ அல்லது பொய்யோ! ஆட்டுக்கறி வாங்கும்பொழுது நம்ம்பதகுந்த ஆட்களிடம்  வாங்கவும். இந்த  ஆட்டை யார் அறுத்தார்கள்  என்று முதலில்  கேட்கவும். கேட்பது ஒன்றும் தவறில்லை!

நமதூரில் செயல் படும் ஒரு ஆட்டுகறிகடையில் அல்லாஹ் விதித்த கட்டளையை மீறி தன்னுடைய சுய நலத்திற்காக பொது மக்களை பழிகடாவாக ஆக்கின்றது ஒரு கறி கடை. பொது மக்களே நாம் விழுப்புனர்வாக இருந்தால் தான் நம்மை நாம் காப்பாற்ற முடியும். இல்லை என்றால் காசு கொடுத்து நஜிசை விலைக்கு வாங்குகின்றோம் என்று தான் அர்த்தம்.

வெளிநாட்டீல் வசிக்கும் சகோதர்களே! உங்கள் வீட்டில் கறி வாங்கும் தாய்மார்கள் இடம் இது சம்மந்தமாக விழிப்புணர் வோடு இருக்கும் மாறு அறிவுறுத்துங்கள்.

 இவர்களை பற்றி கூறவேண்டுமானால் ? இவர்கள் கடை ஏற்கனவே கெட்ட பெயர் வாங்கியது நமது ஊரில் உள்ள முக்கால் வாசிபேருக்கு தெரியும். காரணம் கிடா ஆடு என்று பொட்டை ஆட்டை கொடுப்பது இவர்களுக்கு கைக்குவந்த கலை.
இது சம்மந்தமாக ஜமாத் மற்றும் ஜமாத்தால் வெற்றி பெற்றி பேரூராட்சி தலைவர் கறி கடைகளுக்கான ஓர் விதி முறைகளை ஏற்படுத்துவார்களா ?
ஹராமான உணவு: தானாக செத்தது, பன்றியின் இராச்சி, ரத்தம், இறைவன் பெயர் கூறி அருக்கபடாதது. (திருக்குர்ஆன்)

நன்மைக்கும் (அல்லாஹ்வுடைய) இறை அச்சத்தற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திற்கும் அத்துமீறுவதற்கும் (அநியாயத்திற்கும்) நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம். அல்லாஹ்வுக்கே நீங்கள் பயப்படுங்கள். ஏனென்றால் , நிச்சயமாக அல்லாஹ் , வேதனை செய்வதில் மிகக் கடுமையானவனாக இருக்கின்றான்.
அல் குர்ஆன் 5 :2
நமது நிருபர்.






1 கருத்து:

  1. asalamu alaikum

    i vist one chicken stall , after i seen the clenness of the floor i can not eat chicken when i saw the chicken the seen comes in my mind vomit tendency create.
    there is no hygenic rule followed by chicken and meat stalls

    before somethhing happen punchayat should wake up

    பதிலளிநீக்கு