TNTJ LABBAIKUDIKADU அமீரக சந்திப்பு
ஏக நாயன் அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லெப்பைக்குடிக்காடு ஊர் கூட்டமைப்பின் வழமையான மாதாந்திர அமர்வின் செப்டம்பர் மாத அமர்வு 07/09/2012 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப்பின் 07:00 மணி முதல் இஷா வரைதுபை மண்டல தலைமை மர்கஸில் நடைப்பெற்றது.
இதில் ஏராளமான கொள்கைச் சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சகோதரர் T.M.பஷீர் அஹம்மது அவர்களுடைய துவக்க உரையுடன் அமர்வு துவங்கியது. அதைத் தொடர்ந்து இறை நினைவூட்டலான மார்க்க பயான் செய்யப்பட்டது.
சகோதரர் T.M.பஷீர் அஹம்மது அவர்கள் மரணம் தரும் படிப்பினை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இதில் மனிதனுக்கு மரணத்தின்போது ஏற்படும் வேதனைப் பற்றியும், மரணத்திற்க்குப் பிறகு கப்ரின் நிலை மற்றும் கப்ரின் வேதனை குறித்தும் சிறப்பான ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார்கள். இந்த பயான் இன்றைய சூழ்நிலைக்கு தகுந்ததாகவும்,மரண பயமின்றி உலகமாயையில் மூழ்கிகிடப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும் அமைந்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஒரு மாத கால செயல்பாட்டு அறிக்கையை ஊர்
கூட்டமைப்பின் பொருப்பாளர்களால் வாசிக்கப்பட்டது.
இதில் தாயகத்தில் நடைப்பெற்ற காரியங்கள், ஜூம்ஆ உரை, தெருமுனைப் பிரச்சாரம், வாராந்திர நோட்டீஸ், தர்பியாக்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழுவின்
விபரங்கள்,மாவட்ட செயல்பாடுகள், மாவட்டத்தின் பிறகிளைகளின் செயல்பாடுகள், சமுதாய நிகழ்வுகள் அனைத்தும் அமர்வில் தொகுத்து வாசிக்கப்பட்டன.
ரமளானின் செயல்பாடுகள் பற்றியும், நோன்பு கஞ்சி, ஃபித்ரா, போன்ற செயல்பாடுகள் குறித்தும் அறிக்கைகள் வாசிக்கப்பட்டன.
இந்த வருடம் நமதூர் சார்பாக மட்டும் ரூபாய் 100850 மதிப்பில் 507 குடும்பங்களுக்குஃபித்ரா விநியோகம் செய்ய்யப்பட்டது.
நமதூர் மற்றும் நமதூரைச் சுற்றியுள்ள குன்னம்,புதுப்பேட்டை, திருமாந்துறை கைகாட்டி, கீரனூர், ரஞ்சன்குடி, தேவையூர், வாலிகண்டபுரம்,வல்லாபுரம் ஆகிய ஊர்களுக்கும்லெப்பைக்குடிக்காடு கிளை சகோதரர்களால் ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டதை அறியத்தந்தனர்.
இதுபோல் ரமளான் மாத அறிவுப்போட்டி மற்றும் இரவு தொழுகைக்குப்பிறகு நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள்வழங்கப்பட்டதையும் தெரிவிக்கப்பட்டது.
பெயர் குறிப்பிட விரும்பாத நமதூர் தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொடுத்த 2 இலட்சம் ரூபாய் நன்கொடை லெப்பைக்குடிக்காடு கிளை நிர்வாகிகள் மூலமாக வி.களத்தூர், மற்றும் புதுஆத்தூர் மர்கஸ்களுக்கு (தலா 1 இலட்சம் ரூபாய்) மர்கஸ் கட்டிட நிதியாக 29/08/2012 அன்றுநன்கொடையாக வழங்கப்பட்டதும் தெரிவிக்கப்பட்டது.
இவைகளையெல்லாம் கலந்துக்கொண்ட சகோதரர்களிடம் எடுத்துச் சொல்லப்பட
அவர்களிடம் மென்மேலும் ஆர்வம் மேலிட்டதைக் காண முடிந்தது.
வட்டி இல்லா கடன் திட்டம் மூலம் தேவையுள்ள சகோதரர்களுக்கும், விண்ணப்பித்த சகோதரர்களுக்கும் பொருளாதார உதவிகள் செய்யப்பட்டன.
துஆவுடன் அமர்வு இனிதே நிறைவுபெற்றது!அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!
அனுப்புநர் :அமீரகம் சாதிக் பாஷா TNTJ (LABBAIKUDIKADU )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக