Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 22 செப்டம்பர், 2012

இந்தியாவில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை 26 லட்சமாக உயரும் ஆய்வுத்தகவல்


சென்னை, செப்.22- இதயநோய் பாதிப்புக் கான காரணங்கள் குறித்து அகில இந்திய அளவில் சப்போலா லைப் ஆய்வு 2012 என்ற பெயரில் பொதுமக்களி டம் சர்வே நடத்தப் பட்டது. இந்த சப்போலா லைப் ஆய்வு முடிகள் குறித்து அப்போல்லோ மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைக்கான நிபுணர் மருத்துவர் முத்து வேல் சோமசுந்தரம் கூறியதாவது:-
இந்த ஆய்வை கண்டு மருத்துவ நிபுணர்கள் கவலைஅடைந்துள்ளனர். 1990ஆம் ஆண்டில் 12 லட்சமாக இருந்த இதய நோயாகளின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 26 லட்சமாக உயரும். இதில் அதிகமானோர் 30-44 வயதிற்குட்பட்ட வேலைக்கு செல்வோர் ஆவர்.



இளைஞர்களில் ஆண்களுக்கு இதய நோய் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. இதய நோய் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இளைஞர்கள் குறிப்பாக வேலைக்கு போகும் ஆண்கள் இதய நோய் பாதிக்கப்படும் போது உற்பத்தி குறைவும், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று மருத்துவர் சோமசுந்தரம் தெரிவித்தார்.
மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் காரணமாக இதய நோய் ஏற்படுகிறது. நொறுக்கத்தீனிகள், பொறித்த உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பை முடிந்த அளவுக்கு உணவிலிருந்து நீக்கி விடுவது நல்லது. இதுபோன்ற நடவடிக் கைகள் மூலமே இதயநோயை தவிர்க்க முடியும் என சத்துணவு நிபுணர் மருத்துவர் ஹேமாமாலினி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக