காணாமல் போன பந்தியானம்?
காணாமல் போன பந்தியானம் பரபரப்பான சூழ்நிலையில் லப்பைகுடிக்காடு! முதியவர்கள்
நமதூரில் காலம் காலமாக கல்யாணத்திற்கு பந்தியானம் வைப்பதுதான் வழக்கம். ஆனால் கடந்த சில வருடங்களாக பந்தியானத்தை ஓரம்கட்டி அந்த இடத்தில் தஞ்சம் புகுந்தது பிரியாணி.
நமதூரின் உள்ள சிறப்பில் ஒன்று பந்தியானம் இது உலகம் முழுக்க உள்ள தமிழர்களுக்கு தெரியும். இதை நாம் மறந்தாலும் நமதூர் சரித்திரம் இதை மறக்காது. (வரலாறு முக்கியம்).
இதை நாம் மறந்து புதிதாக ஊடுருவிய பிரியாணியை நாம் வளர்த்ததினால் நமதூரில் சுமார் 60% -70 % மேல் உள்ளோர் சிறு சிறு பாதிப்புக்கு ஆளாகின்றனர். அனால் அப்போது மற்ற ஊர்களை காட்டிலும் நமதூரில் தான் அதிக வலிமையோடும், ஆரோக்கியத்தோடும் வாழ்ந்தனர். இது நம்முடைய நன்னியாத்தவிடம், அத்தாவிடம் கேட்டால் அவர் சொல்வார்.
ஏனென்றால், அதில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது யாரும் அறிவதில்லை!
எப்பதான் கல்யாணத்தில் பந்தியானம் வரும் என்ற எதிர்ப்பார்ப்புடன் முதியவர்கள் காத்து கிடக்கின்றனர்.
இது என்றுமே வராது என்ற நினைப்பில் இப்போது உள்ளவர்கள் ஒரு சிலர் உள்ளனர். ஆனால் காலம் இவர்கள் பக்கமே என்றும் சுற்றாது!
பந்தியானம் விடும் சவால் சந்திக்க பிரியாணி ரெடியா ?
பந்தியானம் : என்னை ஒருபேசன் சோறுடன் எவ்வளவு வேண்டுமானாலும் கலந்து சாப்பிடுங்கள் குறைந்தது 4 - 5 மணிக்கு மேல் பசி எடுத்து விடும்.
ஆனால் பிரியாணியை முடிமா?
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக