Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 5 செப்டம்பர், 2012

செப்டம்பர் 4... உலக "ஹிஜாப்" தினம்!

நபியே, உமது மனைவியருக்கும், புதல்வியருக்கும், இன்னும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும், தங்கள் தலைகளில் "முக்காடு"களை தொங்க விடுமாறு கூறுவீராக! இது,அவர்கள் ஒழுக்கமுடைய பெண்கள் என்று அறியப்படவும், தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படாமல் இருக்கவும் ஏற்றது. (திருமறை குர்-ஆன்-33:59) இந்த போதனைகளை ஏற்று "பர்தா" அணிந்து வாழும் இஸ்லாமிய பெண்களுக்குத்தான் எத்தனை இடர்கள்... இந்த நூற்றாண்டை பொறுத்த வரை "பிரான்ஸ் நாட்டில்" கடந்த 2003ம் ஆண்டின் இறுதியில் தான் "பர்தா" அணிய தடை விதிக்கப்பட்டது. மேலும் ஜெர்மனில் வசித்து வந்த "மர்வாஅஷ்ஷர்பீனி" என்ற 32வயது பெண்மணி பர்தா அணிந்தார், என்ற ஒரே காரணத்துக்காக "கொலை" செய்யப்பட்டார். 


அதுவும், பர்தா குறித்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்திருந்த அந்த பெண், பர்தா குறித்த எதிர்க்க்கருத்துகொண்ட கும்பலால் "நீதிமன்ற வளாகத்திலேயே" சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது, அவருடன் அவரது கணவரும் 2.1/2 கைக்குழந்தையும் உடனிருந்தனர். இதனை எதிர்த்து உலக முஸ்லிம் அமைப்புக்கள் பலவும் "யூசுப் அல்கர்ளாவி" தலைமையில் ஒன்று கூடி "ஆலோசனை" நடாத்தினர். அப்போது "செப்டம்பர் 4" ஐ "உலக ஹிஜாப் தினமாக" அனுஷ்டிக்க முடிவெடுக்கப்பட்டது. அன்று முதல், முஸ்லிம் உலகில் இந்த நாள் உலக "ஹிஜாப்" தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலக நடைமுறைகளில் உள்ளது போல் பெற்றோர் தினம், ஆசிரியர் தினம், மகளிர் தினம் போன்று வருடத்தில் குறிப்பிட்ட அந்த நாளில் மட்டும் சடங்குக்காக குறிப்பிட்ட அந்த துறை சார்ந்தவர்களை போற்றி புகழ்ந்து விட்டு, பிறகு உதாசீனப்படுத்துவதாக "ஹிஜாப்" தினம் அமைந்து விடாது. 


இந்த நாள், பர்தாவுக்காக தனது இன்னுயிர் நீத்த "மர்வாஅஷ்ஷர்பீனி"யின் வீர-தீர செயலை நினைவு படுத்துவதாக உள்ளதுடன், இந்த பிரச்சாரங்களுக்குப்பின், மேற்குலகில் பர்தா அணிபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. பர்தாவை முன்னிறுத்தி முஸ்லிம் பெண்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களின் கதவுகள் வேகமாக அடைக்கப்பட்டு வந்தாலும், பெண்கள் மத்தியில் "இஸ்லாம்" வேகமாக பரவி வருகிறது. "தென் ஆப்ரிக்காவின் இளவரசி" ஹசின் இஸ்லாத்தை கொண்டது, சமீபத்திய ஒரு உதாரணம். குறிப்பு :மேற்குலகில் தான் பர்தாவுக்கு எதிரான செயல்பாடுகள் உள்ளது, என்று யாரும் நினைத்துக்கொள்ள வேண்டாம். நமது இந்தியாவிலும் இப்போது இந்த நோய் பரவி வருகிறது. கர்நாடக மாநில "பர்தா எதிர்ப்பு" செய்தியை காண, இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக