Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

நமதூரில் காப்பீடு திட்டம்


நமதூரில் காப்பீடு திட்டம் ( அடையாள அட்டையை ) பழையது கொடுத்து புதியது வாங்கும் பணி துரிதமாக நடைபெற்றது.
நமதூரில் மேற்கு ஜும்மா பள்ளிவாசல் உள்ள கீழ் வளாகத்தில் 1 ரேசன் கடைகளில் உள்ளவர்கள், அவர்களது பழைய காப்பீடு திட்டக் காடுகளை கொடுத்து புதிய காப்பீடு காடுகளை வழங்கிஉள்ளனர். மேலும் 4  ரேசன் கடைகளில் உள்ளவர்கள் மேற்கு தெற்க்க ( சையது பின் அபி வகாஸ்) பள்ளிவாசல் வெளிப்புறத்தில் வழங்கியுள்ளனர். 
இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் கிழக்கில் இந்தப்பணி தொடங்க உள்ளது. இதில் பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருந்து தங்கள் உரிமைகளை பெற்றுகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். 
குறிப்பு : இதில் பழைய காப்பீடு திட்ட அடையாள அட்டை இல்லாதவர்கள், தங்கள் குடும்பத்தலைவர்களின் வருமான சான்றிதல்  க்குள் இருக்கும்படி எடுத்துக்கொண்டு கலக்டர் அலுவலகத்திற்கு சென்றால் அங்கு இதற்கென்று ஒரு வரிசை அமைக்கப்பட்டிருக்கின்றது. அங்கு சென்று இதையும் ரேசன் காடையும் காட்டினாள் புதியதாக அவர்களே அங்கிருந்து புததொன்றை வழங்குகின்றார்கள். குறிப்பாக வருமான சான்றிதல் ரேசன்காடு நகல்களையும் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு : நமது நிருபர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக