Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 6 செப்டம்பர், 2012

எத்தனை நாளைக்குதான் இப்படியே ?


அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

நம் சமுதாயம் எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய பிரச்சனை நம்மில் நிலவும் ஒற்றுமையின்மை தான். மறுமைப்பற்றி பயம் இல்லாமல் அற்ப உலக சுகத்திற்காகவும் அற்ப பதவி ஆசைக்காகவும் பல பிரிவுகளாக
பிரிக்கப்பட்டு நம் சமுதாயத்தை வேறு அறுக்க நினைக்கும் பாசிஸ்ட்களுக்கு சாதகமாகவே ஒருவருக்கு ஒருவர் குறை கூறுவது , பகைமை உணர்வுடன் பார்ப்பது. பொது மேடையில் திட்டுவது இன்று வாடிக்கையாகி விட்டது.

நம்மிடம் நிலவும் பார்வை:



இன்று நம் சகோதரர்களை சகோதரர்களாக பார்க்கிறோமா ? அவர்களும் முஸ்லிம்கள் தானே. ஆனால் நாம் இன்று பார்ப்பது அவன் சுன்னத் ஜமாத்காரன் , தாருஸ்ஸலாம் , த.த.ஜ , த.மு.மு.க , விடியல் வெள்ளி என்றும் இன்னும் பல இயக்கங்கள் பெயர் கொண்டு அழைக்கிறோம். ஏன் இந்த நிலை
நமக்கு மட்டும். நம் சமுதாயத்தை பற்றியும் நம் ஊரை பற்றியும் நினைத்தோமா ? நம்மில் சிலர் கட்சிகளுக்காகவும் இயக்கங்களுக்காவும் உழைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால் நாளை மஹசர்
மைதானத்தில் அல்லாஹ் நம்மை இப்படி பிரித்து அழைக்கமாட்டான்.

இதன் விளைவுகள் :

இந்த ஒற்றுமையின்மையால் நம்மை அழிக்க நினைக்கும் கும்பல் அதிகமாக நமதூரில் பரவுகின்றார்கள். நமக்கு எதிராக பல சதி வேலைகளை அவர்கள் செய்ய சாதகமாக நாமே நம்மை அறியாமல் உதவுகின்றோம்.
அரசு அதிகாரிகள் நம் ஒற்றுமையின்மை பயன்படுத்தி கொள்கிறார்கள். நம் ஓட்டை பிரிப்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக அமைகிறது. ஆதனால் தான் காலம் முழுக்க ஏமாறும் சமுதாயமாக இருக்கிறோம்.

நமது ஊருக்கு வரும் நல்ல திட்டங்களும் நமது ஒற்றுமையின்மையால் கிடப்பிலும் , நமக்கு வராமலும் போய் கொண்டு இருக்கின்றன. அதில் ஒன்றுதான் தமிழகத்திலேயே முதல் முறையாக நம் ஊருக்கு கொண்டு
வரப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் ஏறக்குறைய 39 ஆண்டுகள் ஆகியும் கிடப்பில் கிடைக்கிறது. கட்சிகளுக்கு உழைக்கும் நம்மில் பலர் அடிமட்ட தொண்டனாகவே இருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும்.

தீர்வும் பலனும்:

நமக்கு இருக்கும் ஒரே கடமையான வாக்குறுமையை நாம் ஒழுங்காக பயன்படுத்த வேண்டும். காலகாலமாக அரசியல் கட்சிக்கு பின்னாடி போய் கொண்டு கொடி பிடித்து கொண்டும் அடிமைகளாக வாழும் நிலை மாற வேண்டும். நம் ஓட்டுகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும். சேர்ந்தால் தான்
நாம் அரசியல் அதிகாரம் பெற முடியும். சமுதாய ஒற்றுமையாக நாம் ஒன்று சேர வேண்டும். இல்லையென்றால் அன்னிய மண்ணில் அடிமைகளாகவும் , சொந்த மண்ணில் அகதிகளாகவும் , வாழும் நிலை நீடிக்கும் .

---சேக் ராசித்  LBK

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக