Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

நமதூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.


நமதூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வளம் வந்தது.
நமதூரில்  நேற்றைய முன்தினம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வளம் வந்தது. இதனால்  நேற்றைய முன்தினம் மாலை முதல் நமதூர் ஒரு பதற்றமான சூழ்நிலையில் இருந்தது. இதற்காக சுமார் 350 க்கு மேற்ப்பட்ட காவல்துறையினர் வந்திறங்கினர்.
மேற்கு மாட்டுபாலம் முதல் கிழக்கு பெண்கள் மேல்நிலை பள்ளிவரை, பள்ளிவாசல்கள், சாலையோர தெருக்கள் முக்கு, மருத்துவமனைகள் மற்றும் பேருந்துநிலையம் போன்ற இடங்களில் ஒவ்வொரு இடங்களிலும் 4  பெண் போலீஸ் உட்பட சுமார் 8 க்கும் மேற்பட்ட காவல் துறை கண்காணிப்போடு இருந்தது. 

இது சுமார் 10 :30 மணியளவில் ஊர்வலம் வலம்வந்தது. இதில் சுமார் 70 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். அப்பொழுது வழக்கம் போல் நிற்கும் நமதூர் இலைகர்கள் ஊர் பாதுகாப்பிற்கு நின்றுகொண்டு கண்காணித்தனர். இதில் காவல்துறையும் நம்மோடு கணிவாக நடந்துக்கொண்டதாக தெரிகிறது. காரணம் இந்தவூர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதமோ அல்லது புதிய தெருக்களுக்கு நுழைந்தாலோ அதற்கு தாங்களே பொருப்பெடுத்துக்கொண்டனர்.
இந்த ஊர்வலம் அமைதியான முறையில் நிகழ்ந்துக்கொண்டிருந்த பொழுது ஒரு இயக்கத்தில் உள்ள பொறுப்புதாரி ஒருவர் எந்த தெருவழியாக செல்கிறது, எப்படி செல்கிறது என்பதை ஆதரம்செயும் விதமாக  அதை வீடியோ எடுத்துகொண்டிருந்தார், அப்பொழுது அதை தடுக்கும் பொருட்டு (முத்து ரத்தபரிசோதனை) முத்து  மற்றும் ஈஸ்வரன் என்பரரும் அதை தடுத்து பிடுங்க பார்த்தனர். பின்பு இவரும் சற்று வேகமாக பேசினார் 
காவல்துறை அந்த இருவரையும் சமாதனம் செய்து அனுப்பிவைத்தனர்.
இந்த தருணத்தில் கிழக்கில் உள்ள சாகுல் ஹமீது என்பவர் வீட்டில் சமுதாய அக்கறையோடு செயல்படும் நமதூர் இளைஞர்களுக்கு சமுதாய நலன்கருதி டீ பார்டி கொடுத்துள்ளனர், இது அந்த இளைஞர்கள் மனதிலே நீங்காத சந்தோசத்தை உருவாக்கியது. நாம் சங்கத்துலதான் இப்படி ராத்திரில டீ பார்டின்னு கேள்விபட்டிருப்போம் ஆனா இந்த பார்டி அதையும் மிஞ்சியதாக தெரிகிறது. இப்படியும் ஒரு சமுதாய அக்கறையா?
பொதுமக்கள் எதிர்பார்ப்பு :
அண்ணன் தம்பியாக பழகிவரும் மாற்று மத சகோரர்களே! நீங்கள் எது செய்தாலும் வழக்கம் போல்வுல்லத்தை பொதுமக்களுக்கு இடையுறு இல்லாமல் செய்துக்கொள்ளுங்கள். இதற்க்கு காவல்துறை பாதுகாபிர்க்கு தேவையில்லை! புதிதாக ஒன்றை உருவாக்குவதும், தெருக்களுக்கு நுழைவதும், நம்மிருவர்களுக்கு மத்தியில் பாதகம் ஏற்பட காரணமாக அமையும். ஒற்றுமையோடு பழகிவரும் நாம், ஒருசில வெளியூர் காரர்களினால் நமக்கு மனகசப்பு ஏற்ப்பட நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். என்பதுதான் பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம், எங்களுக்கு எங்களுடைய மார்க்கம், உங்களுடைய மார்க்கம் உங்களுக்கு, எங்களுடைய மார்க்கம் எங்களுக்கு.
நமது நிருபர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக