Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

மத அவமதிப்பை குற்றகரமாக்கும் சர்வதேச சட்டம் தேவை – ஒ.ஐ.சி


OIC Calls for international 'blasphemy' law must be resisted
ஐ.நா:இஸ்லாத்திற்கு எதிரான தாக்குதல்களை குற்றகரமாக கருதும் சர்வதேச சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஒ.ஐ.சி கூறியுள்ளது. ஐ.நா பொது அவையின் கூட்டத்தை முன்னிட்டு நியூயார்க்கில் நடந்த ஒ.ஐ.சியின் வெளிநாட்டு அமைச்சர்களின் கூட்டத்தில் சர்வதேச நாடுகளுக்கு இக்கோரிக்கை விடுக்கப்பட்டது.


மத அவமதிப்பை குற்றகரமாக கருதும் சட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று ஒ.ஐ.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இறைத்தூதரை அவமதிக்கும் அமெரிக்க தயாரிப்பான திரைப்படம்  மற்றும் பிரெஞ்சு மாத இதழில் கார்ட்டூன் வெளீயானதைத் தொடர்ந்து ஒ.ஐ.சி நாடுகளின் கூட்டம் நடந்துள்ளது. கருத்து சுதந்திரத்தின் பெயரால் நடக்கும் இத்தகைய முயற்சிகள் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறுவதாகும். மத துவேசத்திற்கும், மோதல்களுக்கும் காரணமான நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு தேவை என்று ஒ.ஐ.சி கூறியது.
தகவல் சவுதியில் இருந்து நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக