இதனால் அன்றாடப் பணிகளான மிக்ஸி , கிரைண்டர்களை இயக்க முடியவில்லை . பிரிட்ஜ் ரிப்பேராகி விடுகிறது. மின்விசிறிகளை இயக்க முடியவில்லை . இதனால் தினசரி வாழ்க்கை கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போயுள்ளது . என்ன செய்வது , எங்கு போய் முட்டிக் கொள்வது என்று
தெரியாமல் தமிழக மக்கள் குறிப்பாக இல்லத்தரசிகள் பெரும் குமுறலில் உள்ளனர் . மாணவர்கள் படிக்க முடியவில்லை . தொழில் நிறுவனங்கள் வேலை செய்ய முடியில்லை .
இரவில் கொசுக்கடியுடன் மின்தடையும் சேர்ந்து மக்களை கொன்று வருகிறது . இதுதொடர்பாக தமிழக அரசின் மின்வாரியமான தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை மாலை நேரங்களில் ஹோட்டல்கள் , வர்த்தக நிறுவனங்கள் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் , விளம்பரப் பலகைகளில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகளைப் பொருத்தாமல் இருக்க முன்வர
வேண்டும் . இதன் மூலம் மின்சாரப் பற்றாக்குறையை கணிசமாக குறைத்திட முடியும் .
மேலும் , அனைத்து நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவகங்கள் மாலை 6 மணி முதல் தங்களது சொந்த ஜெனரேட்டரை பயன்படுத்தி மின்தேவையை நிறைவு செய்துகொள்வதோடு அறை குளிர்விப்பான்களின் வெப்பநிலையை சீராக 26 டிகிரியில் நிலை நிறுத்தி , உபயோகித்து மின்சார சேமிப்பு செய்ய தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கோட்டுக்கொண்டுள்ளது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக