அமீரக வாழ் தமிழருக்கு தேசிய விருது.
சிறந்த குடிமகன் தேசிய விருதிற்காக (Best Citizens of India) அமீரக வாழ் தமிழர் ஹூசைன் பாஷா அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2003-ம் ஆண்டு முதல் துபாயில் பணியாற்றி வருகிறார். வணிகம், நிர்வாக மேலாண்மை, மனிதவள மேம்பாட்டுத்துறை ஆகியவற்றில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர், பன்னாட்டு வணிக மேலாண்மையில் எம்.பில். படிப்பையும் முடித்துள்ளார். மேலும், வழக்கறிஞர்களின
மன அழுத்தம் சம்பந்தமான ஆய்வுகளை முனைவர் படிப்பிற்காக மேற்கொண்டிருக்கிறார். கள்ளக்குறிச்சி அர்ரஹ்மானியா பள்ளியின் கல்வி அறக்கட்டளையில் மேலாண்மை உறுப்பினராக உள்ளார். இந்திய மனோதத்துவ சங்கத்தில் இணை உறுப்பினராகவும் உள்ளார்.
அயல்நாட்டில் வாழும் இந்தியர்களின் சமூக சேவைக்கான பிரிவின் கீழ் இவர் இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமீரகத்தில் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், புஜைரா போன்ற இடங்களிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும், குவைத்திலும் ஆளுமைத்திறன், நேர மேலாண்மை பயிற்சி முகாம்களை நடத்தியிருக்கிறார். டான் டிவிக்காக இன்போடைம் என்ற பல்சுவை நிகழ்ச்சியை நடத்திவந்த இவர், வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் அவல நிலை குறித்த ஆவணப்படத்தையும் இயக்கியுள்ளார். இரத்ததான, மருத்துவ முகாம்களை ஒருங்கிணைத்தல், கல்வி மற்றும் சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல் போன்ற சேவைகளை திறம்பட செய்தமைக்காக இந்த விருது வழங்கப்படுவதாக விருது வழங்கும் பி.சி. பப்லிஸிங் சார்பாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நன்றி வி களத்தூர்.இன்போ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக